Newskadai.com
உலகம்

#BREAKING அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா… மனைவி மெலனியாவுக்கு தொற்று உறுதி…!!

Share this:

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிரத்து 671 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் வேறு வரும் நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

brucella

இந்த முறையும் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே இருப்பதால் பிரச்சார வேலைகள் சூறாவளி வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்பிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இருவரும் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். சற்று நேரத்திற்கு முன்பு வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், எனக்கும் எனது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இருந்து இருவரும் விரைவில் மீளுவோம் என பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபருக்கு கொரோனா தொற்று பரவிய விவகாரம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Share this:

Related posts

’கொடூர கொரோனா’ உலக மக்கள் தொகையில் எவ்வளவு பேரை தாக்கி இருக்கு தெரியுமா?!

MANIMARAN M

7 மாதங்களுக்கு பிறகு மக்காவில் தொழுகைக்கு அனுமதி… சவுதி அரசின் அதிரடி முடிவு…!

MANIMARAN M

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M

ஒரே நேரத்தில் 20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. இருவர் பலி…

THAVAMANI NATARAJAN

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

MANIMARAN M

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா..!! ஐநாவில் ஆவேச குற்றசாட்டு…

MANIMARAN M