Newskadai.com
உலகம்

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

Share this:

அமெரிக்கா – சீனா இடையிலான பனிப்போர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பிரச்சனையில் ஆரம்பித்த பிரச்சனை அமெரிக்காவின் அறிவுசார் வளங்களை திருடுவதாகவும், உளவு பார்ப்பதாகவும் அடுத்தடுத்து சீனா மீதான குற்றச்சாட்டுக்களை அதிகரித்து வருகின்றன. பிரச்சனை முற்றியதற்கு உதாரணமாக சீனாவின் ஹூஸ்டன் நகரில் உள்ள அமெரிக்காவும், அதற்கு பதிலடியாக செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சீனாவும் மூட உத்தரவிட்டுள்ளன.

china

சீனா அரசின் உத்தரவை அடுத்து நேற்று அமெரிக்காவில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது. ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் கிளம்புவதற்கு முன்பு முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வாகனங்களுக்கு கூட உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து சந்தேகம் வலுக்கவே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவின் படி மூடப்பட்டிருந்த சீன தூதரகத்தின் கதவுகளை உடைத்து அமெரிக்க போலீசார் சோதனையிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை கூட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அறிவுசார் வளங்களை திருடும் மையமாக சீன தூதரகம் செயல்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. உலக நாடுகளின் பார்வை மொத்தமும் தற்போது அமெரிக்கா – சீனாவை உற்று நோக்கி கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் உத்தரவிட்ட இந்த அதிரடியான செயல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


Share this:

Related posts

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

டெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…!!

AMARA

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

EXCLUSIVE: லெபனானில் வெடித்து சிதறியது கிடங்கு… வெளியானது பயங்கர சத்தத்திற்கான காரணம்…!!

NEWSKADAI

மெகா ஊழல்…. முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை…!!

NEWSKADAI