Newskadai.com
இந்தியா

நாடு முழுவதும் இரண்டு கட்டமாக இன்று யு.பி.எஸ்.சி தேர்வுகள்…

Share this:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 31 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கபட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரொனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளுடன் அக்டோபர் 4 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று 20 தேர்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவின் விசாரணையின் போது தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என யுபிஎஸ்சி பதில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து இன்று காலை 9.30 முதல் யுபிஎஸ்சி தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுகள் அனைத்து இடங்களிலும் காலை 9.30 மணிக்கும் மற்றும் பிற்பகல் 2.20 மணிக்கும் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. சென்னையில் 62 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே தேர்வு அறைக்கு வரவேண்டும், அனைவரும் மாஸ்க் அணியவேண்டும், தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர்களை தேர்வர்களே கொண்டு வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற கொரொனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளுடன் தேர்வு நடைபெற்று வருகின்றன.


Share this:

Related posts

ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..!!

THAVAMANI NATARAJAN

குட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…

MANIMARAN M

குஜராத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாப பலி..!!!

MANIMARAN M

“விவசாயிகளுக்கான கறுப்பு சட்டம்”… வேளாண் மசோதா குறித்து மோடியை விளாசிய ராகுல் காந்தி…!!

MANIMARAN M

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

MANIMARAN M