Newskadai.com
இந்தியா

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

Share this:

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 54 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:http://சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் அமைச்சர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. உத்திரப்பிரதேச மாநில தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சரான கமல் ராணிக்கு (62) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜூலை 18ம் தேதி லக்னோவில் உள்ள ராஜ்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க:http://சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டில் முதன் முறையாக கொரோனா தொற்றுக்கு அமைச்சர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல் ராணியின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கால் வைத்தார் பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் இந்துக்கள்…!!

NEWSKADAI

பாஜகவினருக்கு அடுத்த அதிர்ச்சி… கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா… மகளையும் விட்டு வைக்காத சோகம்…!!

AMARA

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

மாலை நேரத்தில் வந்த நல்ல செய்தி… இனி இ-பாஸ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி…!!

NEWSKADAI

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M