Newskadai.com
அரசியல் இந்தியா

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மது வழங்கப்படும் – அரசின் அதிரடி அறிவிப்பு

Share this:

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்ற உத்திரபிரதேச மாநிலத்தின் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தடுப்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும் கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததும், தேவையற்ற தயக்கமும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள சிலர் மறுக்கின்றனர்.

இதனிடையே உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களைப் பார்த்து விஷ ஊசி போட வருவதாக பரவிய வதந்தியால் அதிலிருந்து தப்பிப்பதற்காக சிலர் அருகில் உள்ள சரயு நதியில் குதித்த சம்பவம் நிகழ்ந்தது.மேலும், கொரோனா தடுப்பூசி போடுவதிலும் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த சூழலில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எடவாக் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். எடவாக் வட்டார அதிகாரியான ஹேம் சிங், சில நாட்களுக்கு முன்பு மதுக்கடைகளில் ஆய்வு செய்துள்ளார். அப்போது, மது வாங்க நின்றிருந்த பலரும் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கூறியுள்ளனர்.

அவர்களின் பதிலால் அதிர்ச்சியடைந்த ஹேம் சிங், 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையைக் காட்டினால் மட்டுமே அவர்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேபோல, பைரோஸ்பாத் மாவட்ட நிர்வாகம், அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


Share this:

Related posts

தவறுதலாக வெடித்த துப்பாக்கி… மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்த டிஜிபி…!!

THAVAMANI NATARAJAN

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

MANIMARAN M

7 மாத குழந்தையையும் விட்டு வைக்காத காவல்துறை… தலித் விவசாயி மீது நடந்த கொடூர தாக்குதல்…!

NEWSKADAI

விரைவில் விடுதலையாகிறார்களா 7 தமிழகர்கள்? … முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தால் பரபரப்பு…!

NEWSKADAI

ஓடுதளத்தில் இரண்டாக உடைந்து விழுந்த விமானம்… கேரளாவில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு??

AMARA

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பிற்கு நாளை முதல் தடை?… மத்திய அரசு அதிரடி…!

NEWSKADAI