Newskadai.com
அரசியல் இந்தியா

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

Share this:

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இந்த 2020 ஆண்டு பெரும் சோதனையான ஆண்டாகவே உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வேலை பார்த்து வந்த உத்தரபிரதேச தொழிலாளர்கள், நாடு தழுவிய கொரோனா நோய் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த மாநிலம் திரும்பினர். அப்படி திரும்பிய மக்கள் தொகை 15 லட்சத்திற்கும் மேல். அவர்களுக்கான மருத்துவ வசதி, உணவு, வேலைவாய்ப்பு போன்றவை பெரும் சிக்கலாக உ.பி அரசுக்கு உருவெடுத்துள்ளன.

இதற்கிடையே கான்பூரில் நடந்த ரவுடி விகாஷ் துபே என்கவுண்ட்டரும் அரசுக்கு தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தன் கட்சி எம்.எல்.ஏ-வாலேயே பிரச்சனை கிளம்பி இருப்பது யோகி ஆதித்யநாத்துக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது.

மாநிலத்தை ஆளும் பாஜகவின் எம்.எல்.ஏ ஷாம் பிரகாஷ். இவர் கோபமாவ் சட்டமன்ற தொகுதி உறுப்பினர். சில நாட்களுக்கு முன்பு யோகி அரசின் மீது சட்டமன்ற நிதி கையாடல் குறித்து புகார் தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் யோகி அரசின் இமேஜை டேமேஜ் செய்துள்ளது. அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “எனது இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் இப்படி ஒரு ஊழலை நான் பார்த்ததில்லை. உ.பி யில் நடைபெறும் ஊழல் குறித்து உயரதிகாரிகளிடம் புகார் செய்தால், அவர்களே அதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர்” என யோகி அரசு மீது பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ ஷாம் பிரகாஷ் பதிவிட்ட செய்தி, சமூக ஊடகங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எம்.எல்.ஏ கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக இக்கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

“எங்கள் வீட்டில் பூஜை ரூமும், சாமி படங்களும் உண்டு”… பிள்ளையாரை வைத்து பிரச்சனை செய்ய நினைத்தவர்களை தெறிக்கவிட்ட உதயநிதி…!!

AMARA

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

AMARA

சினிமா தாதாக்களை மிஞ்சும் ’தங்க கொரோனா மாஸ்க்’ தாதா…

NEWSKADAI

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M