இந்தியாவில் கோரமுகத்தை காட்டி வரும் கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதலே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் வரை நீடித்து வந்த பொது முடக்கத்தில் அதன் பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதியுடன் லாக்டவுன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அரசு 3ம் கட்ட தளர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி எவற்றுக்கெல்லாம் தடை நீக்கப்பட்டுள்ளது என பார்க்கலாம்…
- இரவு நேரங்களில் மக்கள் நடமாட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
- ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பிறகு ஜிம் மற்றும் யோகா நிலையங்களை திறக்க அனுமதி
- கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடலாம்
- வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் அனைத்திற்கும் அனுமதி
- மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல தனிநபர்கள், சரக்கு வாகனங்களுக்கு இனி இ- பாஸ் கட்டாயமில்லை. ஆனால் இந்த உத்தரவு மீது மாநில அரசு முடிவெடுக்கலாம்
- கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநில அரசும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்
- கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம்
- வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளியுடன் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி
எவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு….
- ஆக.31 வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை தொடர்கிறது
- திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மேலும் கூடக் கூடாது.
- பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது
- மெட்ரோ ரயில், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் இயங்குவதற்கு தடை தொடர்கிறது
- சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு
- மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகள் மீதான தடை நீட்டிக்கப்படுகிறது.
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்வித தளர்வுமின்றி ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொது முடக்கம் தொடரும்
- கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்
- இந்த நடைமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிப்பு