Newskadai.com
அரசியல்

கொரோனாவுக்கு மத்திய அமைச்சர் மரணம்… அதிர்ச்சியின் உச்சத்தில் பாஜக தலைமை…!!

Share this:

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி 56 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 4,609,704 பேர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

corona virus

குறிப்பாக கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோரைத் தாண்டி, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க களம் செல்லும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், முதலமைச்சர்கள் என பலரையும் தொற்று வாட்டி வதைத்து வருகிறது. பல அரசியல் கட்சி பிரமுகர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்றால் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அன்காடி சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் அங்காடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கர்நாடகாவின் பெலாகவியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சுரேஷ் அங்காடியின் திடீர் மரணம் கட்சியினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா நோய் தொற்றால் இறந்த முதல் மத்திய இணையமைச்சர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

மக்களின் மீதான பொருளாதார வேட்டை : ரத்தத்தை உறிஞ்சும் அரசுகள் – ஸ்டாலின் கடும் தாக்கு….!!

MANIMARAN M

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை….

MANIMARAN M

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

MANIMARAN M

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

விஜய் சேதுபதிக்கு வலை விரிக்கும் பாஜக… வரித்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் குஷ்பு, அண்ணாமலை… பின்னணி என்ன?

NEWSKADAI

கைது செய்தும் அடங்காத குஷ்பு… திருமா மன்னிப்பு கோரும் வரை போராடுவேன் என ஆவேசம்…!

NEWSKADAI