திருநங்கைகளை கேலி பொருளாக பார்த்த சமூகத்தின் பார்வை தற்போது மாறி வருகிறது. ஆடு மாடுகளை பாதுகாப்பதற்காக பல சட்டங்கள் இருக்கிறது. ஆனால் திருநங்கைகளை பாதுகாக்க எந்த சட்டமும் இல்லை. “திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்” 2019-இல் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தலைமையில் மத்திய அரசு தற்போது உருவாகியுள்ளது. இந்த கவுன்சிலின் தலைவராக சமூகநீதித் துறை அமைச்சர் விளங்குவார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.