Newskadai.com
தமிழ்நாடு

எச்சில் துப்பினால் ரூ.500; மாஸ்க் போடாவிட்டால் ரூ.200… சாட்டையை சுழற்றும் தமிழக அரசு…!!

Share this:

செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பு, பொது போக்குவரத்து அனுமதி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என்ற தளர்வுகளுடன் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி பேணுதல் போன்ற விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் 7 ஆம் தேதி ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் நடமாட்டம் அதிகரிக்கக் கூடும். இதனால் வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும், மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் அவசர சட்டம் ஒன்றினை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்து ஆளுநரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அந்த அவரச சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

BUS

இந்த புதிய கொரோனா தடுப்பு சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கட்டாயம் ஆக்கப்படுகின்றது. இதை பின்பற்றாமல் மீறும் தனி நபர்கள் மீது 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனி மனித பின்பற்றாவிட்டால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200, பொது இடங்களில் எனக்கு என்னவென எச்சில் துப்பினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும் என தமிழக அரசு அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளது. 

அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தளங்கள், போக்குவரத்து இடங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டயம் பின்பற்றவேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது இந்த புதிய சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Share this:

Related posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா ?அமைச்சர் பரபரப்பு தகவல்…

MANIMARAN M

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …!!

THAVAMANI NATARAJAN