Newskadai.com
இந்தியா

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம் : ‘பகீர்’ பட்டியலை வெளியிட்ட யுஜிசி..!!!

Share this:

நாடு முழுவதும் முறையான அங்கீகாரமின்றி செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. இதில் 24 பல்கலைக்கழகங்கள் போலி என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, உத்தரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்களும், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும் போலியாக செயல்பட்டு வருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலா 2 போலி பல்கலைக்கழகமும், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி, மராட்டியம் ஆகியவை தலா ஒரு போலி பல்கலைக்கழகமும் செயல்பட்டு வருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த 24 போலி பல்கலைக்கழகப் பட்டியலை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்றும், அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு கல்வி நிறுவனமும் யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M

பற்றி எரியும் பெங்களூரு… துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு… பரபரப்பு காட்சிகள்…!!

MANIMARAN M

கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்…!!

NEWSKADAI

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M

பிரசவத்திற்கு ஆட்டோ மட்டுமல்ல மெட்ரோ ரயிலும் வரும்… ஒரே ஒரு கர்ப்பிணிக்காக நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

THAVAMANI NATARAJAN