Newskadai.com
அரசியல்

“எங்கள் வீட்டில் பூஜை ரூமும், சாமி படங்களும் உண்டு”… பிள்ளையாரை வைத்து பிரச்சனை செய்ய நினைத்தவர்களை தெறிக்கவிட்ட உதயநிதி…!!

Udhay
Share this:

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் போட்டோவை பகிர்ந்தது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. கந்த சஷ்டி விவகாரத்தில் காற்றில் பறந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவும், இந்துக்களின் வாக்கு வங்கியை காப்பாற்றுவதற்காகவும் திமுக இப்படி செய்ததாக சகட்டுமேனிக்கு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Udhay

மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.

Udhay

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்துக்கு எதிரானதாகத் திசை திருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

Udhay

எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப் படங்கள் உள்ளன. மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டுச் செய்வது எங்கள் வழக்கம்.

இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள், ‘இந்த சிலையை எப்படி செய்வார்கள்’ என்று கேட்டார், இந்த சிலை களிமண்ணில் செய்தது. தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்றேன். ‘இந்த சிலையை எதற்குத் தண்ணீரில் போடணும்’ என்று கேட்டார். ‘அதுதான் முறை என்கிறார்கள்  அடுத்த வருஷத்துக்குப் புதிதாக வேறொன்று வாங்குவார்கள்’ என்றேன்

Udhay

. ‘கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்கள்’ என்று கேட்டார். அவரின் விருப்பத்தின் பேரில் நான்தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்துக்காக என் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். அவ்வளவு என அதிரடியாக விளக்கம் கொடுத்துள்ளார்.


Share this:

Related posts

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

AMARA

மாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…!!

NEWSKADAI

ஆறே கேள்விகளில் மோடியை ஆட்டம் காண வைத்த ராகுல் காந்தி…!!

THAVAMANI NATARAJAN

“சாதி அரசியல் செய்பவரோடு கூட்டணி இல்லை”… இறங்கி வந்த ராமதாஸ்… எகிறி அடிக்கும் திருமா…!!

MANIMARAN M

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI