Newskadai.com
தமிழ்நாடு

யூ-டியூப் பார்த்து இளைஞர்கள் செய்த காரியம்… கடை கடையாய் ஏறிய போது கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!

Arrest
Share this:

யூடியூப் வீடியோக்களை மக்கள் பெருமளவு பயன்படுத்துவது பொழுபோக்காகவும், படிப்பிற்காகவும், பயன்படுத்துவது மக்களின் வழக்கம் ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு கடலூர் மாட்டத்தை சேர்ந்த இருண்டு வாலிபர்கள் ஒரு பொருளை தயாரித்துள்ளனர். கடலூர் மாவட்டம் குமாரப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம், திருமானிக்குழி சங்கர் இருவரும் நண்பர்கள், இவர்கள் யூடியூப்பில் புதுப் புது வீடியோக்களைப் பார்த்து பொழுதை கழித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு தீடிரென துப்பாக்கி செய்யும் ஆர்வம் வந்துள்ளது. அதனால் இருவரும் சேர்ந்து ஹவ் டு மேக் கன்ட்ரி மேடு ரைஃபில்..? என்று யூடியூப்பில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் தேடிய வீடியோ கிடைக்கவே அதை பார்த்து தாங்களகவே துப்பாக்கி செய்ய தயாராகிவிட்டனர். துப்பாக்கி செய்ய போதுமான பொருட்களை மரத்துண்டுகளில் செய்துள்ளனர்.

உதிரி பாகங்களையும் கடை கடையாக அலைந்து தேடி வாங்கியுள்ளனர். இவர்களின் செயல்கள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் திருப்பாதிரிப் புலியூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் ரகசியமாக இவர்களது வீட்டை சோதனையிட்டுள்ளார். துப்பாக்கியின் இறுதி வேலை முடிப்பதற்கு முன்பே காவலர்களிடையே சிக்கிக்கொண்டனர்.

மேலும் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவலர் ஆறுமுகம், சங்கர் இருவரையும் கைது செய்தனர். காவலர் நடத்திய விசாரணையில் துப்பாக்கி தயார் செய்து காக்கா, குருவிகளை வேட்டையாட நினைத்தார்களாம் ஆனால் அதற்கு முன்பே போலீசாரிடம் சிக்சிக்கொண்டாதாக தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் வீட்டிலேயே இருந்து பழக்கமான இவர்களுக்கு இப்படியொரு விநோதமான எண்ணங்கள் தோன்றியதால் சிறைவாசம் சென்றுள்ளனர்.


Share this:

Related posts

மணல் திருட்டு விவகாரம்: தமிழக அரசின் கறார் நடவடிக்கைகள்…!

THAVAMANI NATARAJAN

மார்பில் அடித்துக்கொண்டு கதறும் விவசாயிகள்… சேதமான நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி போராட்டம்..!

MANIMARAN M

பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு… பவானிஸ்வரர் கோவிலுக்கு அபாய எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

கல்லூரி இறுதி பருவத் தேர்வை தவிர அனைத்தும் ரத்து… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA

ஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…!!

NEWSKADAI

மருத்துவ மாணவர்கள் கட்டாயம் 2 ஆண்டு அரசு பணி : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M