Newskadai.com
இந்தியா

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

Share this:

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் 52 வயதான கப்பார் அஹ்மத் கச்சாவா. அவர் சிகார் பகுதியில் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டி வருகிறார். ஆட்டோவில் வந்துக் கொண்டிருந்த தன்னை இருவர் வழிமறித்து, மோடி ஜிந்தாபாத் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட சொல்லி கடுமையாக தாக்கி, தலையில் பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளனர் என்று சடர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கப்பார் அஹ்மத் அளித்த புகாரில், “நான் வெள்ளிக்கிழமை அதிகாலை ஷோட்டி ஜிஹாரில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வரும்போது என்னை இருவர் வழிமறித்தார்கள். பின்னர் அவ்விருவரும் மோடி ஜிந்தாபாத், ஜெய் ஸ்ரீ ராம், என கோஷமிட சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். அவர்கள் சொல்லியபடி நான் செய்யாததால், என்னுடைய தாடியைப் பிடித்து இழுத்து என்னை முரட்டு தானமாக அடித்தார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக எனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு வேகமாக ஓட்டிச் சென்றேன். அவர்கள் என்னை விடாமல் பின்னால் துரத்தி வந்தார்கள். அருகில் இருந்த கோதுமை கிடங்கு அருகில் என்னை மீண்டும் நிறுத்தி என்னை கட்டையால் கடுமையாக தாக்கினார்கள். அதில் எனது முகத்திலும், உடலில் பல இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. எனது பல்லும் உடைந்தது. பின்னர், என்னுடைய மணி பர்ஸையும் அவர்கள் பிடுங்கிச் சென்றுவிட்டார்கள்”, என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜக்தல்பூரைச் சேர்ந்த ராஜேந்திரா, ஜிகார் சோட்டியைச் சேர்ந்த ஷம்பு தயாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் பல கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் ஆவர். இவர்கள் வைத்திருந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்புகார் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்

MANIMARAN M

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

கொரோனா நேரத்தில் கோலாகலமாக நடக்கப்போகும் அயோத்தி பூமி பூஜை…!

NEWSKADAI

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M