Newskadai.com
தமிழ்நாடு

இ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…!!

Share this:

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை என்றும், இதற்காக தனியாக இ-பாஸ் பெற தேவையில்லை என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை முதலமைச்சர் பழனிசாமி ஊரடங்கை அறிவித்தார்.

அப்போது மத்திய அரசு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம் என்றும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அறிவித்தார். இதனால் சிறு, குறு வணிகர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

தமிழகத்தில், அனைத்து கடைகள், தொழிற்சாலைகள் திறந்த பின், பிற மாவட்ட தொழிலாளர்கள், அண்டை மாவட்டங்களுக்கு வணிக ரீதியாக சென்று வர, ‘இ — பாஸ்’ கட்டாயப்படுத்தப்படுவது பல சிக்கல்களை உருவாக்கியது. அதுமட்டுமின்றி இ-பாஸ் கட்டாயம் என்பதை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அதனால் அந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு வணிகர் சங்கங்களின் சார்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இ-பாஸ் வழங்க மாவட்டந்தோறும் கூடுதலாக ஒரு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மக்கள் உடனுக்குடன் இ-பாஸ் பெற மாவட்டம் தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெளி மாநில தொழிலாளர்களை தாரளமாக அழைத்து வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

மாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…

MANIMARAN M