Newskadai.com
தமிழ்நாடு

சுனாமி அறிகுறியா?… இரு தினங்களாக கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி…!!

Share this:

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் அவ்வப்போது வீசி வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் இரண்டு நாட்களாக கடல் உள்வாங்கி மக்களிடையே சுனாமி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் கன்னியாகுமரியில் கடல் திடீரென சில மீட்டர் தூரம் உள்வாங்கியது. திருவள்ளுவர் சிலை வரை கடல் உள்வாங்கி தரைப்பகுதி தெரிய வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இரவு முழுவதும் உள்வாங்கியிருந்த கடல் நீர் நேற்று காலையில் தான் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பின்னர் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனார். ஆனால் நேற்று மாலையும் மீண்டும் கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் பதட்டமடைந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோல் தான் சுனாமிக்கு முன்பு கடல் உள்வாங்கியது. அதனால் இது சுனாமி வருவதற்கான அறிகுறியா என்ற அச்சம் எங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இருப்பினும் கடலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. அதனால்கூட இப்படி கடல் உள்வாங்கியிருக்கலாம். எப்படியிருந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்று கூறினர்.


Share this:

Related posts

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

அடுத்த 24 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…

NEWSKADAI

மக்கள் உயிர் மீது இவ்வளவு அலட்சியமா?… சேலம் கொரோனா பணியாளர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை…!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

அதிரடி சரவெடி: 40 சதவீத பாடங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்…!!

MANIMARAN M

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI