Newskadai.com
உலகம்

டிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…

Share this:

2012ஆம் ஆண்டு சீனாவில் பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட பைட்டான்ஸ் நிறுவனத்தின் இணையவழி செயலியான டிக்டாக், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சீன அரசுக்கு டிக்டாக் பயனாளர்களின் தகல்வகளை பகிர்ந்துக் கொள்வதாக அமெரிக்காவிலும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அமெரிக்க அதிபர் டிக் டாக்கை அமெரிக்காவைச் சார்ந்த ஏதாவதொரு நிறுவனம் வாங்கி நடத்தலாம், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் அதற்கு பிறகு டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். கடந்த வாரம் அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்.

டிக்டாக் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், டிக்டாக், பைட் டாண்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக நம்புவதற்கு நம்பகமான சான்றுகள் உள்ளன, அதனால் அடுத்த வரும் 90 நாட்களுக்குள் டிக்டாக் நிறுவனத்திற்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள அனைத்து விதமான வியாபார செயல்பாடுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கவில் எடுக்கபட்டு வரும் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளின் மீதான நடவடிக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமெரிக்க முன்னனி ஆப்பிள் நிறுவனம் கவலைத் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

தூய்மை பணியாளர்களை கெளரவித்த சவுதி அரசு… ஹஜ் பயணத்தில் தனி மரியாதை…!!

MANIMARAN M

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

திடீரென நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை… உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆக்ஸ்போர்ட்…!!

MANIMARAN M

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI