Newskadai.com
அரசியல்

மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சமூக விரோதிகள்…!

Share this:

பெரியார் மண் என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தொடர்ந்து பெரியார் சிலை மீது காவி சாயம் பூசுவது, சிலையை உடைப்பது, செருப்பு மாலை அணிவிப்பது போன்ற முட்டாள்தனமாக செயல்கள் அரங்கேறி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் கோவை குனியமுத்தூரில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அதிமுக அரசு விசாரணையை துரிதப்படுத்தியது.

Periyar Statue

அதன் பின்னர் பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு, அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இந்த சம்பவம் அரங்கேறி கிட்டதட்ட 2 மாதத்திற்குள் தற்போது திருச்சியில் மீண்டும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனாம்குளாத்தூர் ஊராட்சியில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஓட்டிய பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவு வாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Periyar Statue

இந்நிலையில் அந்த பெரியார் சிலைக்கு நேற்றிரவு சமூக விரோதிகள் சிலர் காவிச்சாயம் பூசியும், காலணி மாலை அணிவித்தும் அவமதிப்பு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த மணிகண்டம் காவல்துறையினர் காவி சாயத்தை சுத்தப்படுத்தி, காலணி மாலையை அகற்றினர். இந்த தகவலைக் கேள்விப்பட்டு, தி.க., கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சியினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Periyar Statue

பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டது யார் என்பதை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


Share this:

Related posts

மாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…!!

NEWSKADAI

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN

#BREAKING முதல்வர் வேட்பாளராக எடப்பாடியே தொடர்வார்…. ஓ.பி.எஸ். வாயிலிருந்து வந்த பொன்னான அறிவிப்பு….!!

NEWSKADAI

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

AMARA

“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…!!

MANIMARAN M

பாஜகவுக்கு அடுத்த ஆப்பு… கூட்டணியில் இருந்து விலகியது மற்றொரு கட்சி…!!

MANIMARAN M