Newskadai.com
தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்ட ஓட்டுனர்கள்… திருச்சியில் நடந்தேறிய விபரீதம்…

Share this:

திருச்சி சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கழுத்தில் தூக்குப் போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், பலரும் வருமானம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் முறை அமலில் இருப்பதாலும், பயணிகள் இன்றி வாகனங்களை இயக்க வழியில்லாமல் கார் ஓட்டுனர்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பெரும்பாதிப்பினால் திருச்சி சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் மத்திய பேருந்து நிலையத்தில், இ-பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தூக்குப்போடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடந்த ஆறு மாதங்களாக வாகனங்கள் இயக்க முடியாத ஊரடங்கு சூழலில் வரி செலுத்தவும், செலுத்தாத வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. கடன் தவணையைச் செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதுடன், நிலுவைத் தொகைக்கு அபராதமும் விதிக்கின்றன. மாநில அரசிடம் எங்கள் பாதிப்புகள் குறித்து மனு அளித்தும் எங்களுக்கு உதவவோ, நிவாரணம் வழங்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சூழலில் அரசு எங்களைக் கைவிட்டதால் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Share this:

Related posts

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI

தமிழகத்தில் விரட்டி விரட்டி வெளுக்கும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

MANIMARAN M

கறி விருந்து: ஜலகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி?

NEWSKADAI

ஏழை மாணவியின் ஐ.ஏ.எஸ்.கனவு… வீடு தேடி போய் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

THAVAMANI NATARAJAN

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

AMARA