Newskadai.com
தமிழ்நாடு

தமிழக அரசுக்கு அடுத்த பேரிடி… கொரோனாவால் பல கோடிகளை இழந்த முக்கிய துறை…!!

Share this:

கொரோனா தொற்று ஊரடங்கில் தமிழகத்திற்கு தொடர்ந்து தளவுர்கள் அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவை கடந்த வாரத்தில் இருந்து முழு பணியாளர்களுடன் வேலையை தொடங்க அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
BUS
கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அதிக அளவில் பேருந்தில் பயணிப்பதை தவிர்த்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக அரசு பேருந்துகள் அதிக அளவில் பேருந்து நிலையங்களிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவான மக்களே பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனால் பேருந்துக்கு டீசல் போடும் செலவுக்குகூட ஆகாத நிலையில் உள்ளதாகவும், வரவை விட செலவு அதிகமாக இருப்பதால் போக்குவரத்து கழகத்திற்கு  பெரும் இழப்பு ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணத்தால் ஊரடங்கு பிறபிக்கப்பட்ட நாளில் இருந்தே மக்கள் தங்களிடம் உள்ள இரு சக்கர வாகனங்களையும், கார் மற்றும் வாடகை கார் போன்றவைகளை பயன்படுத்தி பழகிவிட்டார்கள். எனவே பஸ்யில் பயணிக்கும் தேவை குறைந்துவிட்டது. சூழ்நிலை இப்படி இருக்கையில் அரசு விரைவு பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டு இதற்கான பயணக் கட்டணத்தின் மூலமாக பயணிகளிடம் இருந்து ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதே ஓராண்டில் அந்த பேருந்துக்கு 1095 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.
BUS
வரவை விட கூடுதலாக 450 கோடி ரூபாய் செலவு இருப்பதற்கான காரணம் ஓட்டுநர், நடத்துநரின் ஊதியம், முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதியம், பேருந்து பழுதுக்கான செலவுகள், டீசல் செலவு, சுங்கக்கட்டணம், போக்குவரத்து கழகத்திற்காக பெறப்பட்டுள்ள 2,000 கோடிக்கான வட்டித் தொகை  போன்றவையால் இவ்வளவு செலவுகள் ஆகிறது. SETC சார்பில் 1,200 பேருந்துகள் இருந்தாலும், தற்போது 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் 250 பேருந்துகளுக்கு மட்டுமே தேவை இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போதைய நிலையோ மக்கள் அதிகம் பேருந்துகளை பயன்படுத்தாமலும், வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் இருப்பதால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். மேலும் வரும் நாட்களில் அதிக பேருந்து இயக்கப்பட்டாலும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share this:

Related posts

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

மன்னிப்பு கேட்டால் விட்டுடுறோம்… எஸ்.வி.சேகருக்கு கெடு விதித்த காவல்துறை…!!

MANIMARAN M

ஜலகையை வச்சு செய்யும் கொரோனா: தொற்றால் அடுத்தடுத்து 10 பேர் பலி!?..

POONKUZHALI

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

MANIMARAN M

நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

AMARA

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா … ராஜ்பவனிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA