Newskadai.com
தமிழ்நாடு

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

Share this:

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் வசித்து வந்தவர் பவானி. கடந்த சில நாட்களாக குடியிருப்புக்கு வராமல் போனதையடுத்து குடியிருப்புவாசிகள், பவானி அடிக்கடி செல்லும் மகாராஜா நகர் பகுயில் இருக்கும் முருகன், அனுஷ்கா ஆகியோரின் வீட்டிற்கும் சென்று பார்த்துள்ளனர்.

அந்த வீட்டிலும் பவானியை காணவில்லை. மேலும் அந்த வீட்டில் ரத்தக் கறை இருப்பதை பார்த்துள்ளனர்.  குடியிருப்புவாசிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரில் பவானியை சில நாட்களாக காணவில்லை என்றும், தங்களுக்கு சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், பவானி அடிக்கடி செல்லும் முருகன், அனுஷ்கா வீட்டில் ரத்தக் கறை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சேலம் ரிஷிகேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் விசாரணையில் பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோரை கொலை செய்துவிட்டதாகவும்,  மூன்று பேரின் உடல்களையும் சாக்குமூட்டையில் கட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள கிணற்றில் போட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இத்தகவலை கேட்ட காவல்துறையினர் புறவழிச்சாலையில் உள்ள கிணற்றுக்கு சென்று மூன்று பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிகேஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்…. சீர்காழி அரசு மருத்துவமனையின் அவலம்…!!

MANIMARAN M

கல்லூரி இறுதி பருவத் தேர்வை தவிர அனைத்தும் ரத்து… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

ஜலகையில் செஞ்சூரி அடித்த கொரோனா… தீயாய் பரவும் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி?

NEWSKADAI