Newskadai.com
தமிழ்நாடு

#BREAKING | இ-பாஸ் தேவையில்லை… இன்று முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…!

Hogenakkal Falls
Share this:

கொரோனா தொற்று காரணமாக ஒட்டுமொத்த நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது, திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், சுற்றுலா தளங்கள், கடற்கரைகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் தடை விதிக்கப்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.

Hoganakkal

தமிழகத்தில் பள்ளி, திரையரங்கள் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் இயல்பாக இயங்க ஆரம்பித்திருக்கின்றன. எனினும் சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கொடுத்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் சவாரி செய்யவும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார். சின்னாறு முதல் கோத்திக்கல் மெயின் அருவி வரை பரிசல்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மீன் சமையல் செய்யவும், ஆயில் மசாஜ்க்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அந்த முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.

இந்நிலையில் இன்று காலை ஒகேனக்கல் சுற்றுலா பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் மலர்விழி சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கியுள்ளார். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எல்லை பகுதியிலேயே கொரோனா உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், மற்ற சுற்றுலா தளங்களைப் போல் ஒகேனக்கல் வர சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, இந்த நீர்வரத்து மீண்டும் 20 ஆயிரம் கன அடியாக உயரும் பட்சத்தில் மீண்டும் தடை விதிக்கப்படும் என ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

கார் மோதியதால் தூக்கிவீசப்பட்ட காவலர்கள்… சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்…!

THAVAMANI NATARAJAN

தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

லாரியில் மோதிய ஷேர் ஆட்டோ… துண்டான விரல்களைத் தேடி சாலையில் துடிதுடித்த பயணிகள்…!

THAVAMANI NATARAJAN

இன்னும் இரண்டே நாள்: சான்று பெற்ற பணியாளர்களுக்கு மட்டும் தொடங்குகிறது அதிரடி சேவை…!

MANIMARAN M

15 கோடி ரூபாய் செல்போன்கள் கொள்ளை… கண்டெய்னர் லாரியை வழிமறித்த கைவரிசை…!

THAVAMANI NATARAJAN

தந்தையின் சொல் கேட்காததால் சொந்த மகனை தூக்கில் தொங்கவிட்ட தந்தை… சேலத்தில் நடந்த பயங்கரம்…!

THAVAMANI NATARAJAN