Newskadai.com
தமிழ்நாடு

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

Share this:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு சில நிபந்தனைகளுடன் மீண்டும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. அதில் முக்கியமான கட்டுப்பாடு ஆகஸ்ட் 31ம் தேதி வரை வரும் 5 ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்பது தான். அதன்படி நாளை தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் படிக்க:http://“ரஜினியால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடிவு”… திடீரென அதிரடி காட்டும் தமிழருவி மணியன்…!!

தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மிகவும் முக்கிய தேவைகளான பால் மற்றும் மருந்து கடைகளை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் கட்டாயம் மூடப்படும்.

மேலும் படிக்க:http://“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

அதேபோன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. அத்தியாவசியப் வாகனங்களான மருத்துவ வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்வதற்காக சில பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே இயங்கும். நாளை முதல் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

சென்னையில் கட்டுக்குள் வரும் கொரோனா… அமைச்சர்கள் குழு திடீர் ஆலோசனை…!!

AMARA

தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு…. ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில் தலையிடுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஆணை…!

MANIMARAN M

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

AMARA

நோயாளிகளுக்கு கோயில் அன்னதானம்… அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு…!

AMARA

#coronavirus தினந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கும் இறப்பு எண்ணிக்கை- இன்றைய கொரோனா நிலை..!!

NEWSKADAI

அடக்கொடுமையே !! கோவை மின் மயானத்தில் எரியூட்ட காத்திருக்கும் உடல்கள்… பகீர் வீடியோ…!

NEWSKADAI