Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

மகிழ்ச்சி செய்தி..! நாளை முதல் ரூ.2,000 வழங்கப்படும்

Corona-Relief-Fund
Share this:

கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியின் இரண்டாவது தவணை தொகையான ரூ.2,000 நாளை முதல் வழங்கப்பட உள்ளது. சென்னையில் கொரோனா நிவாரண நிதி மற்றும் 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதால் 2 வாரங்களுக்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வருகிறது. கொரொனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல் தவணையாக தலா ரூ. 2000 கடந்த மாதம் இறுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது தவணை தொகையான தலா ரூ.2,000 வழங்கும் பணி நாளை தொடங்குகிறது.

இதுமட்டுமின்றி, மக்களின் சிரமங்களை குறைக்கும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிவாரணப் பொருட்களை பெற பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் வைத்து தொடங்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.

நிவாரண பொருட்களின் தொகுப்பு வழங்குவது மட்டுமின்றி, 2ஆம் தவணை கொரோனா நிவாரண நிதியான தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.


Share this:

Related posts

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

நாகை மக்களுக்கு ரூ.1000 கோடியை அள்ளிக்கொடுத்த முதல்வர்… அசத்தலான திட்டங்கள்…

MANIMARAN M

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!

THAVAMANI NATARAJAN

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI