Newskadai.com
அரசியல்

நாளை ஒத்திவைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை… மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு…!!

Share this:

கொரோனா நெருக்கடி காலத்திலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஏற்கனவே தமிழக எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும், 6 அமைச்சர்களும் கொரோனா தொற்றால் மீண்டுள்ளனர். இதனால் சட்டமன்றத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் பேரவை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதில் மீண்டும் 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் Ban NEET Save Tamilnad students என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.

சட்டமன்றத்தின் முதல் நாளான இன்று, மறைந்த 23 முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மறைந்த திமுக எம்.எல்.ஏ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மான வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து சட்டமன்றத்தின் இன்றைய நிகழ்வுகளை சபாநாயகர் ஒத்திவைத்தார். நாளை மீண்டும் சட்டமன்றம் கூட உள்ளது. அந்த கூட்டத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு, கொரோனா நெருக்கடி, மாணவர்கள் தற்கொலை உள்ளிட்டவை திமுக பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது.


Share this:

Related posts

“மாணவ செல்வங்களே இதுபோல் செய்யாதீர்கள்”…. உருக்கமாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்…!!

NEWSKADAI

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA

ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!

NEWSKADAI

ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!

AMARA

“அதிமுகவில் அடுத்த முதல்வர் யார்?”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு…!!

AMARA