Newskadai.com
லைஃப் ஸ்டைல்

துர்க்கை அம்மனை வழிபடுங்கள், மாற்றங்களை விரும்புவீர்கள், இன்றைய அதிஷ்டமான எண் இதுதான்…

Share this:


இன்று 15.09.2020 ஆவணி மாதம் 30 தேதி செவ்வாய் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45 ,  மாலை: 07.30 – 08.30


பிரதோஷம், சிவராத்திரி

சந்திராஷ்டமம் :  உத்திராடம், திருவோணம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று பிற்பகல் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும், புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு, தொழிலில் இது வரை இருந்து வந்த தடைகள் விலகும், மனதில் நினைத்தவரை திருமணம் செய்யும் வாய்ப்பு அமையும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும், குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று துர்க்கை அம்மனை வழிபடுங்கள், வியாபாரம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே காலையில் தன லாபமும், மாலையில் தைரியமும் கிடைக்கும் நல்ல நாள், இன்று நீங்கள் நினைத்தை நடத்தும் தைரியம் கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் இருக்கும், வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். மகாலட்சுமி வழிபாடு செய்யவும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும், கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள், தன லாபம் இருக்கும், கணவன் மனைவி உறவில் விட்டு கொடுத்து செல்வது நல்லது, நண்பர்கள் மத்தியில் பகை தோன்றி மறையும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களின் தரத்தை உயர்த்தும், மாற்றங்களை விரும்புவீர்கள், உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் தீரும், வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று காலை நேரத்தில் நீங்கள் மனதில் நினைத்து நடக்கும் நாள், பதவி உயர்வு கிடைக்கும், வேலை இடமாறுதலுக்கு மாலையில் முயற்சி செய்யவும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரும், தன லாபம் பெருகும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே நல்ல வேலை வாய்ப்பு  தேடி வரும், தன லாபம் கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது, சிவபெருமானை வழிபடுங்கள் காரிய வெற்றி கிடைக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் காக்கி வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே உங்கள் மதிப்பு உயரும், வியாபாரம் பெருகும், எதிர்பார்த்த நல்ல செய்தி வரும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், விநாயகர் வழிபாடு நல்ல பலனை தரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே காலை நேரம் கலங்கத்தை கொடுத்தாலும் மாலை நேரம் மன நிறைவை தரும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே திருமண வாய்ப்புகள் கைகூடிவரும் நல்ல நாள், மாலை நேரத்தில் அமைதியை கடைபிடிப்பது நல்லது, சூதாட்ட விசயங்களில் ஈடுபட வேண்டாம், தன லாபம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே நண்பர்கள் வகையில் நம்பிக்கை துரோகம் நடக்க வாய்ப்புள்ளது கவனமாக இருக்கவும், உங்கள் ரகசியங்கள் மற்றும் சொத்துகள் சம்ந்தமான திருட்டு நடக்க வாய்ப்புள்ளது கவனம் தேவை, மாலை பொழுது சிறப்பாக இருக்கும், உங்கள் மதிப்பு உயரும், பொருளாதார உயர்வு கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே குலதெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள், மாலை பொழுதில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும், எதிர் பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண்  2, வண்ணம் முத்து வண்ணம்.


Share this:

Related posts

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN

வந்தாச்சு ஸ்மார்ட் கிளாஸ் டாய்லெட்… இனி கிளீனாக இருக்கான்னு உள்ள போய் பார்க்க வேண்டாம்…!!

MANIMARAN M

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M