இன்று 08.09.2020 ஆவணி மாதம் 23 தேதி செவ்வாய் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.
நல்லநேரம் : காலை: 07.45 -08.45 , மாலை: 04.45 – 05.45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 -11.45 , மாலை: 07.30 – 08.30
தேய்பிறை சஷ்டி, கிருத்திகை
சந்திராஷ்டமம் : சுவாதி
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380
மேஷம்
மேஷ ராசி நேயர்களே மனதில் படபடப்பு இருக்கும், எந்தச் செயலை செய்தாலும் நிதானமாக செய்வது நல்லது, வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும், கல்வியில் வளர்ச்சி இருக்கும். அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே எண்ணம் போல் வாழ்க்கை என்பது போல நீங்கள் மாற்றங்களை விரும்பினால் மாற்றங்கள் நடக்கும், இடமாற்ற சிந்தனைகள் வந்து போகும், இளைய சகோதர வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து போகும், வியாபாரத்தில் லாபம் இருக்கும். அதிர்ஷ்டமான எண் 3 , வண்ணம் தேன் வண்ணம்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் கிடைக்கும், நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும், மூத்த சகோதரர்கள் வழி உதவிகள் கிடைக்கும் . அதிர்ஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.
கடகம்
கடக ராசி நேயர்களே நிரந்தர வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் கூற வேண்டாம், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வரவினங்களும், செலவினங்களும் பெருகும், அதிர்ஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும், பகைவர்களும் நண்பர்களாக தெரிவார்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வியாபாரத்தில் லாபம் இருக்கும், மகிழ்ச்சியான செய்திகள் வரும். அதிர்ஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு ராஜயோகம், வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும்,. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், கலைத்துறையினர் வெற்றி அடைவாரகள், அதிர்ஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே புதிய பதவிகள் கிடைக்கும், மருத்துவ துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும், தொழிலில் வெற்றி கிடைக்கும், மிகச்சிறந்த நாள். அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களே உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும், கருத்து மாறுபாட்டை தவிர்க்கவும், மனைவியை புரிந்து அவர்களின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளுங்கள், தன லாபம் பெருகும். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே வாழ்க்கையில் தெளிவு பிறக்கும், வேலைவாய்ப்புகள் சிறக்கும், லாபம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிர்ஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.
மகரம்
மகர ராசி நேயர்களே வீடு மற்றும் மின்சாதன பொருட்கள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும், தந்தையின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துகொள்ள வேண்டும், செய்யும் செயலில் கவனமாக இருந்தால் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே அரசியல் தொடர்புகள் விரிவடையும், புதிய பதவிகள் மற்றும் பொறுப்புகள் வந்து சேரும், குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும், வியாபாரத்தில் வாபம் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.
மீனம்
மீன ராசி நேயர்களே வியாபாரத்தில் வளர்ச்சி, தேவையான கடன் உதவி புதிய வேலைவாய்ப்புகள் அமையும் நாள், யோகமான நாளாக இருக்கும் அதிர்ஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.