Newskadai.com
லைஃப் ஸ்டைல்

வெற்றி மேல் வெற்றி வரும் நல்ல நாள்… வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது…

today rasi palan
Share this:


இன்று 11.10.2020 புரட்டாசி மாதம் 25 தேதி ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 06.00 -07.00 , மாலை: 03.15 – 04-15. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 10.45 – 11.45,  மாலை: 01.30 – 02.30


தசமி

சந்திராஷ்டமம் :   பூராடம், உத்திராடம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று பண வருமானத்திற்கான முயற்சிகள் அதிகமாக இருக்கும், பொழுதுபோக்கு விசயங்களில் ஆர்வம் கூடும், குழந்தைகள் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், வேலை சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெரும், பேச்சில் நிதானம் தேவை. அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும் நாள், வேலை முயற்சிகள் இன்று செய்தால் நல்ல செய்திகள் வரும், தன லாபம் அதிகரிக்கும், பண செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது கவனமாக இருக்கவும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று பண வரவுகள் இருக்கும், இருப்பினும் மனதில் டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும், தத்தாத்ரேயர் வழிபாடு செய்வது செல்வ வளத்தை தரும், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் . அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று பொறுமையை கடைபிடித்தால் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும், தேவையான கடன் உதவிகள் கிடைக்கும், குழந்தைகளிடம் அனுசரித்து செல்வது சிறப்பு, கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று வேலை வாய்ப்பில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ள நாள், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும், திருமண முயற்சி செய்பவர்கள் கவனமாக முடிவெடுப்பது நல்லது. அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று வெற்றி மீது வெற்றி வரும் நல்ல நாள், கல்வியில் முன்னேற்றம் இருக்கும், தாயாரின் ஆசிர்வாதம் கிடைக்கும், எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியை தரும் நல்ல நாள். அதிஷ்டமான எண் 2, வண்ணம் ஆரஞ்சு வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று வேலைவாய்ப்புகள் குறித்த குழப்பங்கள் இருக்கும், சீரடி பாபாவை  வழிபாடு செய்வது நன்மைகள் அதிகளவில் நடைபெரும், அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும், குடும்பத்திலுள்ள மூத்தோர்களின் ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும், வியாபாரத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று வேலை சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை தரும் நாள், தன லாபம் கிடைக்கும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும், மன நிம்மதி பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று எந்த காரியத்தை செய்தாலும் பொறுமையாக செய்ய வேண்டும் அவசரப்பட கூடாது, பேச்சை குறைப்பது நல்லது, குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் இருக்கும், குழந்தைகள் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று எதிர்பர்த்த காரியங்கள் விரைவாகவும் வெற்றியை தரும் வகையிலும் இருக்கும், புதிய வீடு வாங்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், பண வரவுகள் இருக்கும், இன்று வரும் வாய்ப்புகளை கவனமாக கையாள்வது நல்லது. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது, நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களுக்கு இன்று முயற்சி செய்தால் வெற்றியை தரும், தன லாபம் கிடைக்கும் குரு பகவானை வழிபாடு செய்வது நல்லது, இன்று யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று இறைவனின் ஆசீர்வாதம் பரிபூரணமாக இருக்கும் நாள், தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை தரும், விநாயகர் வழிபாடு வெற்றியை தரும், கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது, வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், கூட்டுத்தொழில் செய்பவர்கள் எந்த பகைமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டாம் . அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Share this:

Related posts

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்…எதிரிகளால் வந்த பிரச்சனைகள் விலகும்…

THAVAMANI NATARAJAN

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி… கணவன் இறுதிச்சடங்கிலேயே பிரிந்த மனைவி உயிர்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!

THAVAMANI NATARAJAN