Newskadai.com
லைஃப் ஸ்டைல்

பிறரை குறை சொல்ல வேண்டாம்… தொட்ட காரியமெல்லாம் வெற்றி தான்…

today rasi palan
Share this:


இன்று 07.10.2020 புரட்டாசி மாதம் 21 தேதி புதன் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.


நல்லநேரம் : காலை: 09.00 -10.00 , மாலை: 04.45 – 05-45. கௌரி பஞ்சங்க நல்லநேரம் : காலை: 01.45- 02.45,  மாலை: 06.30 – 07.30


தேய்பிறை சஷ்டி

சந்திராஷ்டமம் :   விசாகம், அனுஷம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களை சாமர்த்தியத்தால் வெற்றி பெருவீர்கள், சகோதர உறவுகளால் உங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் நடைபெரும், வேலை சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெரும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.

Risabam Rasi

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று வீடு வாகனம் வாங்கும் யோகமான நாள், சுப காரியங்கள் குறித்த பேச்சு வர்த்தைகள் துவங்கும், வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும், அலுவலகங்களில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்..


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று வாழ்க்கையில் ஏற்றம் பெறும் நல்ல நாள், கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், குழந்தைகள் வழியில் செலவுகள் வந்தாலும் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும், கல்வி மற்றும் வியாபார விசங்களில் நன்மைகள் கிடைக்கும், அக்கம் பக்கத்தினரால் ஏராளமான உதவிகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், குழந்தை வரம் வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், அரசு வழி நல்ல செய்திகள் வரும், தந்தை வழி உறவினார்களால் பல நன்மைகள் கிடைக்கும், சூரிய வழிபாடு செய்தால் உங்கள் பிரச்சனைகள் விலகும், பொழுது போக்கு விசயங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Simmaam Rasi

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும் நாள், தந்தை மகன் உறவு மேம்படும், இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும், குழந்தைகளால் மன நிம்மதி கிடைக்கும், பொருளாதார உயர்வு கிடைக்கும். உடல் நல பிரச்சனைகள் விலக சீரடி பாபாவை வழிபடுங்கள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.

Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நன்மைகள் நடைபெரும் நல்ல நாள், எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும், உயர் கல்வி முயற்சிகள் வெற்றியை தரும், தாயாரின் ஆசிர்வாதம் பெருவது தொட்ட காரியமெல்லாம் வெற்றி தரும், விநாயகர் வழிபாடு வெற்றிகளை அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று பயனங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை, தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Virusagam Rasi

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று தன லாபம் மற்றும் குடும்ப நிம்மதி கிடைக்கும் நாள், தந்தை வழி உறவினர்களால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் நாள், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், நீண்ட நாள் எதிர் பார்த்த பொருள் வரவுகள் வந்து சேரும், விநாயகரை வழிபாடு செய்வது பல வெற்றிகளை தேடித்தரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று கடந்த கால கஷ்டங்கள் விலகி நல்ல செய்திகள் வரும் நாள், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும், தன லாபம் கிடைக்கும், மன கஷ்டங்கள் விலக குடும்பத்திலுள்ள பெரியோரிடம் ஆசிர்வாதம் பெறுவது சிறப்பு, நாவடக்கம் பெரிய வெற்றிகளை பெற்றுத்தரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று சேமிக்கும் எண்ணங்கள் அதிகரிக்கும் நாள், வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும், வேலை ரீதியான தடுமாற்றங்கள் வந்தாலும் நீங்கள் வணங்கும் கடவுளின் ஆசியால் நல்ல வேலை கிடைக்கும், மனதில் நினைத்தவரை மனமுடிக்கும் வாய்ப்புகள் இருக்கும், மனைவி வழி சொந்தங்களால் பல நன்மைகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாளாகவும் , எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகவும் அமையும், குழந்தைகள் சம்பந்தமான நல்ல செய்திகள் தேடிவரும், புதிய வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று தடைகள் விலக கூடிய நல்ல நாள், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அலுவலகத்தில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், தாய் வழி சொந்தங்களால் நன்மைகள் நடைபெரும், அருகிலுள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்வது மிக சிறந்த பலன்களை தரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் ராமர் பச்சை வண்ணம்.


Share this:

Related posts

உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?

NEWSKADAI

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

நடுத்தரவாசிகளை நடு நடுங்க வைத்த தங்கம் விலை… இன்றைய விலை என்ன..!?

AMARA

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

இன்றும் குறைந்தது.. தங்கம், வெள்ளி இன்றைய நிலை..!!

NEWSKADAI