Newskadai.com
லைஃப் ஸ்டைல்

23.02.2021 இன்று எங்கும் எதிலும் வெற்றி பெரும் நல்ல நாள்…யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது…!!!

Today rasi palan
Share this:

இன்று 23.02.2021 மாசி மாதம் 11 தேதி செவ்வாய் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 07.30- 08.30, மாலை: 04.30 – 05.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.30 -11.30,  மாலை: 07.30 – 08.30.

ஏகாதசி

இன்று காலை 10.57 வரை  சந்திர பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று மாலை 04.21 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

சந்திராஷ்டமம் :  கேட்டை, மூலம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று சிவ பெருமானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மன குழப்பங்களை தீர்க்கும், வெற்றிகள் பெருகும், அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது கவனமாக இருக்கு வேண்டும், வேலையை விட்டு நிற்கும் முடிவுகள் எடுக்க கூடாது, பரணி நட்சத்திரத்தினருக்கு அலுவலத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும், கிருத்திகை நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எலுத்த வேண்டும், வியாபாரத்தில் தந்திர முயற்சிகளால் வெற்றி பெருவீர்கள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வெள்ளை வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று பண வரவுகள் வரும் நல்ல நாள், குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் தேடிவரும், கிருத்திகை நட்சத்திரத்தினர் வேலை பார்க்கும் இடத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு சாதகமான பல விஷயங்கள் நடக்கும், நன்மைகள் நடக்கும் நல்ல நாள்,  மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் எதை செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும், யாரையும் நம்பி முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட கூடாது, எச்சரிக்கை தேவை, சகோதர உறவில் விட்டுக்கொடுத்து செல்லவும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சிகரமான நாள், சுப நிகழ்ச்சிகள் பற்றிய மகிழ்ச்சி பெருகும், எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் சகோதர உறவுகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு நல்ல பண வரவுகள் இருக்கும், மன மகிழ்ச்சியான செய்திகள் வரும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று இடமாறுதல் கிடைக்கும் நாள், வாழ்க்கையில் தடம் மாறியவர்களை திருத்த நல்ல வழி கிடைக்கும், குருவின் ஆசீர்வாதம் கிடைக்கும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு கடவுள் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உயர்வு உண்டு, பூசம் நட்சத்திரத்தினர் வியாபாரத்தில் புதியவர்களை நம்ப வேண்டாம், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு மகிழ்ச்சியான தருனங்கள் நிறைந்த நாள். அதிஷ்டமான எண் 5. வண்ணம் பச்சை வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எடுத்த முயற்சிகள் வெற்றி பெரும் நாள், மகம் நட்சத்திரத்தினருக்கு காலை 11 மணி வரை நேரம் அதிக வெற்றியை தரும், பூரம் நட்சத்திரத்தினருக்கு 11 மணிக்கு மேல் அனைத்து காரியங்களும் வெற்றியை தரும், சுப காரிய செய்திகள் தேடி வரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவும் குடும்பத்தில் நிம்மதியும் கிடைக்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று எதிர்கால திட்டங்கள் குறித்த சிந்தனைகள் பெரும் நாள், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு, உத்திரம் நட்சத்திரத்தினருக்கு உடல் நலத்தில் அக்கறை தேவை, அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம், பொதுமக்கள் தொடர்பான விஷயங்களில் கருத்துகள் சொல்வதில் எச்சரிக்கை தேவை, அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு பூமி யோகம் உண்டு. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று சந்திர பகவான் வழிபாடும் பெற்றோரின் ஆசீர்வாதமும் பெற வேண்டிய நாள், சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனமாக இருக்க வேண்டும், நல்ல பதவிகள் கிடைக்கும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு வண்டி வாகன பயணங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், சுவாதி நட்சத்திரத்தினருக்கு தன வரவுகள் பெருகும், விசாகம் நட்சத்திரத்தினருக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டு. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


daily horoscope

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள், விசாகம் நட்சத்திரத்தினருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், வேலை பார்க்கும் இடத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், அனுஷம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், கேட்டை நட்சத்திரத்தினர் வியாபாரத்திற்கு கடன் பெருவீர்கள், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று முன்னேற்றகரமான தகவல்கள் தேடிவரும் நாள், எடுத்த முயற்சிகள் வெற்றி பெரும், மூலம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், பூராடம் நட்சத்திரத்தினருக்கு நல்ல வேலை கிடைக்கும், பெண்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள், புதிய வேலை வாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெரும், உத்திராடம் நட்சத்திரத்தினர் புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள், திருவோணம் நட்சத்திரத்தினருக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டு, அவிட்டம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் . அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று எங்கும் எதிலும் வெற்றி பெரும் நல்ல நாள், ஏராலமான நன்மைகள் தேடிவரும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு, சதயம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு குழந்தைகளால் நன்மை உண்டு, சுப காரிய செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றி பெரும் நாள், புதிய வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெரும், மன குமுறல்கள் மறையும் நாள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு பண வரவுகள் உண்டு, உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு புதிய வேலை வாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெரும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு பொறுமையான செயல்பாட்டால் வெற்றி பெருவீர்கள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

22.02.2021 இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக அமையும் நாள்…வம்பு வழக்குகளில் விலகி இருப்பது நல்லது…!!!

THAVAMANI NATARAJAN

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

11.01.2021 இன்று புதிய முயற்சிகள் வெற்றி பெரும் நாள்…பிடிவாதத்தை கைவிடுவது நன்மையை தரும்…!!!

THAVAMANI NATARAJAN

19.01.2021 இன்று முருக பெருமான் வழிபாடு செய்ய வேண்டிய நாள்…எதிலும் அவசரப்பட்டு கையெழுத்து போட வேண்டாம்…!!!

THAVAMANI NATARAJAN

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறைக்க சூப்பரான வழிமுறைகள்..!!!

THAVAMANI NATARAJAN

இன்று ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா?! தங்கம் விலை இன்றைய நிலை..!!

NEWSKADAI