Newskadai.com
லைஃப் ஸ்டைல்

21.02.2021 இன்று விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்…யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது…!!!

Today rasi palan
Share this:

இன்று 21.02.2021 மாசி மாதம் 09 தேதி ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 06.30- 07.30, மாலை: 03.30 – 04.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.30 -11.30,  மாலை: 01.30 – 02.30.

தசமி

இன்று காலை 07.33 வரை  சந்திர பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று பிற்பகல் 02.13 வரை நவமி பின்பு தசமி.

சந்திராஷ்டமம் :  விசாகம், அனுஷம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று தன லாபம் கிடைக்கும் நாள், முயற்சிகளில் வெற்றி உண்டு, அஸ்வினி நட்சத்திரத்தினர் விநாயகர் வழிபாடு செய்வது வெற்றியை தரும், தன வரவு கிடைக்கும், பரணி  நட்சத்திரத்தினருக்கு கலை திறமைகள் வெளிபடும், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு கால் பகுதியில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று கலை துறையில் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும் நாள், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு கண் சம்பந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும், நண்பர்களுடன் இந்த நாளை செலவிட விரும்புவீர்கள், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு சுக நிகழ்ச்சிகள் தேடிவரும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று விஷ்ணு வழிபாடு செய்ய வேண்டிய நாள், வியாபாரத்தில் புதியவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு தன வரவு அதிகரிக்கும், திருவாதிரை நட்சத்திரத்தினர் எந்த முயற்சி செய்தாலும் நன்கு யோசித்து செய்வது  நன்மையை தரும், எதிலும் அவசரப்பட வேண்டாம், ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது, புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு தன வரவுகள் உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகள் பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள், எந்த விஷயத்திலும் அவசரப்பட வேண்டாம், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு மனைவி வழி சொந்தங்களுடன் சில கருத்து மாறுபாடுகள் ஏற்படும் அனுசரித்து செல்ல  வேண்டும், பூசம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் முன்னேற்றமான தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 2. வண்ணம் முத்து வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் மிகச்சிறப்பான நாள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும், மகம் நட்சத்திரத்தினர் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், பூரம் நட்சத்திரத்தினருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்புக்ள வரும், உடல் நலத்தில் அக்கறை தேவை, உத்திரம் நட்சத்திரத்தினருக்கு எங்கும் எதிலும் வெற்றி பெருவீர்கள். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் வெற்றி பெருகும் நல்ல நாள், தடைகள் விலகும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும், அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு விருந்தினர்கள் வருகை உண்டு, சித்திரை நட்சத்திரத்தினருக்கு வரவுகள் பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று சித்திரை நட்சத்திரத்தினருக்கு வண்டி வாகன பயணங்களில் மிகுந்த கவனம் தேவை, கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தும் போதும் கவனம் தேவை, சுவாதி நட்சத்திரத்தினருக்கு போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டியது அவசியம், விசாகம் நட்சத்திரத்தினருக்கு பண வரவுகள் அதிகரிக்கும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


daily horoscope

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று விசாகம் நட்சத்திரத்தினருக்கு பொருளாதார மேன்மை உண்டு, சிறு தூர பயணங்கள் இருக்கும், அனுஷம் நட்சத்திரத்தினர் பிறரை நம்பி கையெழுத்திடுவதில் எச்சரிக்கை தேவை, கேட்டை நட்சத்திரத்தினருக்கு வரவினங்கள் அதிகரிக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாள், வரவுகள் பல வழிகளில் வரும் அதில் சரியான வழியை தேர்வு செய்வது நன்மையை தரும், மூலம் நட்சத்திரத்தினர் விநாயகர் வழிபாட்டால் பல வெற்றிகளை பெற முடியும், பூராடம் நட்சத்திரத்தினருக்கு திருமண விஷயங்கள் கைகூடி வரும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டு. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள், உங்கள் நடவடிக்கையை சதிகாரர்கள் உற்று கவனிப்பார்கள், பேச்சு வார்த்தையில் எச்சரிக்கை தேவை, உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு நல்ல வரவு உண்டு, திருவோணம் நட்சத்திரத்தினருக்கு நல்ல பதவிகள் கிடைக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு, சகோதரருடன் இருந்த மன கசப்புகள் விலகும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்இல் 

கும்ப ராசி நேயர்களே இன்று பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு இடமாற்றம் குறித்த சிந்தணைகள் தோன்றும், சதயம் நட்சத்திரத்தினருக்கு குடியிருக்கும் இடத்தில் சில பிரச்சனைகள் வரும், வாகனங்களில் பழுது ஏற்படும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதிக செலவினங்கள் ஆபத்தை தருக் என்பதை புரிந்து நடக்க வேண்டும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டு. அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று குடும்பத்தில் நிம்மதி மற்றும் தன லாபம் கிடைக்கும் நல்ல நாள், நண்பர்களிடம் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு எண்ணிய எண்ணங்கள் இனிதாக முடியும் நல்ல நாள், உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் நல்ல நாள், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு அக்கம் பக்கத்தினரால் நன்மைகள் உண்டு, எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி பெருவீர்கள். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

09.02.2021 இன்று புதிய வாய்ப்புகள் தேடிவரும் நாள்…யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது…!!!

THAVAMANI NATARAJAN

பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!

THAVAMANI NATARAJAN

12.02.2021 இன்று நன்மைகள் அதிகளவில் நடக்கும் நல்ல நாள்…வியாபார விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை…!!!

THAVAMANI NATARAJAN

பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

THAVAMANI NATARAJAN

02.02.2021இன்று பூர்வ புண்ணிய ஆதாயம் கிடைக்கும் நாள்…யாரையும் விமர்சனம் செய்ய கூடாது…!!!

THAVAMANI NATARAJAN

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI