இன்று 20.02.2021 மாசி மாதம் 08 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.
நல்லநேரம் : காலை: 07.30- 08.30, மாலை: 04.30 – 05.30.
கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.30 -11.30, மாலை: 09.30 – 10.30.
நவமி
இன்று அதிகாலை 05.13 வரை சந்திர பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.
இன்றைய திதி : இன்று பிற்பகல் 12.30 வரை அஷ்டமி பின்பு நவமி.
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380
மேஷம்
மேஷ ராசி நேயர்களே இன்று பேச்சின் மூலம் எதையும் சாதிக்கும் நல்ல நாள், தொழில் செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்த்தால் இந்த நாளில் வெற்றி உண்டு, அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருக்கும், கனவன் மனைவி உறவில் கருத்து மாறுபாடுகள் இருக்கும் அனுசரித்து செல்லவும், பரணி நட்சத்திரத்தினருக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் நல்ல நாள், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு சகோதர உறவில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே இன்று இன்று எந்த செயலிலும் ஒரு படபடப்பு இருக்கும் நாள், கிருத்திகை நட்சத்திரத்தினர் தந்தையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு சுபக்காரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் உண்டு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு உடல் நலப் பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே இன்று எந்த செயல்பாடுகளிலும் மனைவியின் மனம் பாதிக்காமல் நடந்துகொள்ள வேண்டிய நாள், வேலை பார்க்கும் இடத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது, மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் உருவாகும், திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு அனைத்து காரியங்களிலும் நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும், எதிர்பார்த்த வெற்றிகள் தேடிவரும், காலபைரவரை வழிபட்டால் வெற்றிகள் உண்டு, புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு சுப காரியங்கள் நடத்துவது குறித்த சிந்தணைகளும், பொருளாதார உயர்வுக்கான முயற்சிகளும் செய்வீர்கள். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.
கடகம்
கடக ராசி நேயர்களே இன்று பல திருப்புமுனைகளை ஏற்படுத்தும் நாள், வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு தன வருமானம் பெருகும், வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது, பூசம் நட்சத்திரத்தினருக்கு வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி வரும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு தொழில் முயற்சிகள் அடுத்த கட்டத்தை எட்டும், முயற்சிகளில் நம்பிக்கை இருந்தால் வெற்றி உண்டு. அதிஷ்டமான எண் 1. வண்ணம் மாணிக்க வண்ணம்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே இன்று தாய் தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள், மகம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும், பூரம் நட்சத்திரத்தினருக்கு மனைவியின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், ஏமாற்றுக்காரர்கள் சூழ்ந்திருக்கிறார்கள் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை, மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே இன்று முன்னேற்றகரமான நாள், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெரும், நல்ல தகவல்கள் தேடிவரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், அரசு சம்பந்தமான காரியங்கள் வெற்றி பெரும், அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கூடிவரும், உயர் கல்வியில் இருந்த தடைகள் விலகி .நல்ல தகவல்கள் தேடிவரும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு புதிய வீடு கட்டும் யோகம் உண்டு, சகோதரருடன் கருத்து மாறுபாடுகள் வரும் அனுசரித்து செல்லவும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே இன்று கனவுகள் நனவாகும் நல்ல நாள், எந்த முடிவுகள் எடுத்தாலும் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு, சுவாதி நட்சத்திரத்தினர் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை கிடைக்கும், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள கூடாது, விசாகம் நட்சத்திரத்தினருக்கு வரவுகள் பெருகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களே இன்று விசாகம் நட்சத்திரத்தினருக்கு வரவுகளும் செலவுகளும் பெருகும், அனுஷம் நட்சத்திரத்தினருக்கு வேலை சம்பந்தமான மன அழுத்தம் இருக்கும், உங்கள் கருத்துகளை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம், அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம், கேட்டை நட்சத்திரத்தினருக்கு அவரவர் துறைகள் சார்ந்த முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், மூலம் நட்சத்திரத்தினருக்கு இடமாற்றம் உண்டு, பூராடம் நட்சத்திரத்தினருக்கு தன வரவு உண்டு, உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு பல நன்மைகள் நடக்கும் நாள். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.
மகரம்
மகர ராசி நேயர்களே இன்று பேச்சு வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டிய நாள், வெளிநாட்டு வர்த்தகம் செய்வோருக்கு வெற்றிகள் உண்டு, உத்திராடம் நட்சத்திரத்தினர் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும், திருவோணம் நட்சத்திரத்தினருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ஒரு டென்ஷனும் இருந்து கொண்டே இருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு நண்பர்களால் நன்மைகள் உண்டு, புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே இன்று கல்வி முயற்சிகளில் வெற்றி பெரும் நாள், உங்கள் பிள்ளைகளால் சில மன கஷ்டங்கள் இருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், சதயம் நட்சத்திரத்தினருக்கு குடும்பத்தினருடன் இருப்பதில் ஈடுபாடு அதிகரிக்கும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு செலவுகள் அதிகரிக்கும், சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.
மீனம்
மீன ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றி பெரும் நல்ல நாள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உண்டு, பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு எடுத்த முயற்சிகள் வெற்றி பெரும், உத்திரட்டாதி நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் முன்னேற்றமான தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.
இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!