இன்று 18.02.2021 மாசி மாதம் 06 தேதி வியாழக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.
நல்லநேரம் : காலை: 12.30- 01.30, மாலை: – – -.
கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: – – –, மாலை: 06.30 – 07.30.
வளர்பிறை
இன்று அதிகாலை 00.08 வரை சந்திர பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.
இன்றைய திதி : இன்று காலை 00.26 வரை சஷ்டி பின்பு சப்தமி.
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380
மேஷம்
மேஷ ராசி நேயர்களே இன்று நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவுகள் வரும், பரணி நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருக்கும், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே இன்று பூமி சம்பந்தமான லாபம் வரும் நாள், கனவன் மனைவி பிறிந்து இருந்தவர்கள் மீண்டும் இணைவார்கள், கோபத்தை தவிர்க்க வேண்டும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு எதிர்பாராத வெற்றி செய்திகள் தேடி வரும், ரோகிணி நட்சத்திரத்தினர் அலுவலகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், உங்கள் கோபம் வெற்றியை தடுக்க வாய்ப்புள்ளதால் கோபத்தை தவிர்ப்பது நல்லது, மிருகசீசீரிஷம் நட்சதிரத்தினருக்கு எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே இன்று அதிஷ்டகரமான நாள், உங்கள் எதிரிகள் மறைந்துகொள்வார்கள், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு இடமாற்றம் உண்டு, முருக பெருமான் வழிபாடு வெற்றியை தரும், திருவாதிரை நட்சத்திரத்தினர் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம், உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துகொள்ள வேண்டும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் லாபம் பெருகும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.
கடகம்
கடக ராசி நேயர்களே இன்று வெற்றிகரமான நாள், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு பொருளாதாரம் சம்பந்தமான வெற்றி செய்திகள் தேடிவரும், பூசம் நட்சத்திரத்தினர் கடன் வாங்குவதை தவிர்க்கவும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் வந்துசேரும். அதிஷ்டமான எண் 7. வண்ணம் ரோஜா வண்ணம்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே இன்று திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெரும் நாள், மகம் நட்சத்திரத்தினருக்கு பொருளாதார மேன்மை உண்டு, மண வரவுகள் வரும், பூரம் நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருக்கும், ஸ்ரீரங்கநாரை வழிபாடு செய்வது நன்மையை தரும், உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு நண்பர்கள் வழி நல்ல தகவல்கள் தேடிவரும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே இன்று முன்னேற்றமான நாள், பயணங்களை தவிரக்க வேண்டும், பேச்சு வார்த்தையில் கவனம் தேவை, உத்திரம் நட்சத்திரத்தினருக்கு உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும், அஸ்தம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு சொத்து சுகங்கள் பெருகும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே இன்று அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் நாள், தாயாரின் ஆசீர்வாதம் கிடைக்கும், அலுவலகத்தில் மூத்த பெண்மணியின் ஒத்துழைப்பு கிடைக்கும், சித்திரை நட்சத்திரத்தினர் வண்டி வாகன பயணங்களில் கூடுதல் கவனம் தேவை, முருக பெருமான் வழிபாடு வெற்றியை தரும், சுவாதி நட்சத்திரத்தினருக்கு காரிய வெற்றி உண்டு, விசாகம் நட்சத்திரத்தினர் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், தற்பெருமை பேசுவதை தவிர்த்தால் இந்த நாள் இனிய நாள். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களே இன்று நன்மைகள் அதிகளவில் நடக்கும் நல்ல நாள், உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், கனவன் மனைவி உறவில் அனுசரித்து செல்வது நல்லது, விசாகம் நட்சத்திரத்தினர் குடும்ப ரகசியங்களை வெளியில் கூற வேண்டும், அனுஷம் நட்சத்திரத்தினருக்கு எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, கேட்டை நட்சத்திரத்தினர் எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே இன்று வெற்றிகளை தேடித்தரும் நல்ல நாள், மூலம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன லாபம் உண்டு, சுபச்செய்திகள் தேடிவரும், பூராடம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், ஒரு டென்ஷன் இருக்கும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பார்க்கும் வெற்றிகரமான தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.
மகரம்
மகர ராசி நேயர்களே இன்று அதிஷ்டம் தேடிவரும் நல்ல நாள், உத்திராடம் நட்சத்திரத்தினர் பிறரின் அந்தரங்க விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் வெற்றி உண்டு, திருவோணம் நட்சத்திரத்தினருக்கு குடும்பத்தாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு நண்பர்கள் வகையில் நல்ல தகவல்கள் வரும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே இன்று வெற்றிகரமான செயல்பாடுகளை தேடிதரும் நாள், அவிட்டம் நட்சத்திரத்தினர் புதிய வீடு கட்டும் முயற்சி மற்றும் வீடு வாங்கும் முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது, சதயம் நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, குடும்பத்தில் நிம்மதி இருக்கும், பூரட்டாதி நட்சத்திரத்தினர் எந்த செயலை செய்தாலும் பதட்டப்படாமல் நிதானமாக செய்ய வேண்டும், புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.
மீனம்
மீன ராசி நேயர்களே இன்று சுபச்செய்திகள் தேடிவரும் நாள், வெற்றிகள் பெருகும், பூரட்டாதி நட்சத்திரத்தினர் யாரையும் நம்பி பணம், நகையை தர வேண்டாம், உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு மிகச்சிறந்த வெற்றிகள் வரும், நல்ல செய்திகள் தேடிவரும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு சில பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும், யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.
இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!