Newskadai.com
லைஃப் ஸ்டைல்

16.02.2021 இன்று வியக்க வைக்கும் வெற்றிகள் தேடிவரும் நாள்… யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது…!!!

Today rasi palan
Share this:

இன்று 16.02.2021 மாசி மாதம் 04 தேதி செவ்வாய் 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 07.30- 08.30, மாலை: 04.30 – 05.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.30 – 11.30,  மாலை: 07.30 – 08.30.

சமநோக்குநாள்

இன்று இரவு 09.42 வரை  சந்திர பகவான் ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 04.30 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

சந்திராஷ்டமம் :  உத்திரம், அஸ்தம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று சுய தொழில் செய்யும் ஆர்வம் பெருகும் நாள், அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு நண்பர்களின் ஆலோசனை மற்றும் சில வாய்ப்புகள் கிடைக்கும், பரணி நட்சத்திரத்தினருக்கு மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெரும். தன வரவுகள் உண்டு, கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு எந்த செயலையும் பக்குவமாக செய்ய வேண்டும் அவசரப்படக்கூடாது, கருத்துகள் சொல்லும் போது எச்சரிக்கை தேவை. அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று வெற்றிகளை தேடித்தரும் நல்ல நாள், அம்பாளை வழிபாடு செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டு, கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு குடும்ப வாழ்வில் சில தொந்தரவுகள் இருக்கும் அதனை பெரிதுபடுத்தாமல் அனுசரித்து சென்றால் நல்ல நாள், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு வெற்றிகரமான செய்திகள் தேடிவரும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் எந்த காரியத்தையும் பதட்டப்படாமல் செய்ய வேண்டும், யாரையும் நம்பி ரகசியங்களை கூற வேண்டாம், எதிலும் அவசப்படக்கூடாது. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று வெற்றிகரமான நாள், அதிகளவு வெற்றிகள் கிடைக்கும், பலருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் வேலை பார்க்கும் இடத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு பல நன்மைகள் ஏற்படும் நாள், புனர்பூசம் நட்சத்திரத்தினர் எதிரிகளை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சி பெருகும் நல்ல நாள், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு இன்று வரும் தகவல்களை முழுமையாக நம்பிவிடாமல் ஆராய்ந்து செயல்பட வேண்டும், பூசம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவுகள் வந்து சேரும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு நாள் முழுவதும் ஒரு டென்ஷன் இருக்கும். அதிஷ்டமான எண் 3. வண்ணம் தேன் வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று அவசரப்பட்டு சில செயல்களில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும் நாள், எந்த விஷயத்திலும் அவசரபட்டு செய்ய வேண்டாம், நிதானமாக செயல்படுவது நல்லது, முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம், மகம் நட்சத்திரத்தினர் இன்று பிறர் விஷயத்தில் பட்டும் படாமல் நடந்து கொண்டால் பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள், பூரம் நட்சத்திரத்தினருக்கு வெற்றிகள் பெருகும், உத்திரம் நட்சத்திரத்தினர் பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும் நல்ல நாள், தொழில் முயற்சிகளில் வெற்றி உண்டு, உத்திரம் நட்சத்திரத்தினருக்கு தந்தை வழி உறவினர்களுக்கு உடல் நல பிரச்சனைகள் இருக்கும், அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு நாள் பட்ட வியாதிகள் வெளிபட்டு நிவர்த்தியாகும், சித்திரை நட்சத்திரத்தினர் சகோதர உறவில் பகை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் சொத்துகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று வியக்க வைக்கும் வெற்றிகள் தேடிவரும் நாள், நல்ல தகவல்கள் வரும், கல்வியில் முன்னேற்றம் இருக்கும், சித்திரை நட்சத்திரத்தினர் தான தர்மங்கள் செய்து மகிழ்ச்சி காண்பீர்கள், சுவாதி நட்சத்திரத்தினருக்கு வரவினங்கள் பெருகும், விசாகம் நட்சத்திரத்தினர் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பிர்ந்துகொள்ள வேண்டாம். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


 

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த நல்ல பதவிகள் கிடைக்கும் நாள், பொதுமக்கள் சார்ந்த முறையில் இருப்பவர்களுக்கு சில பகைகள் உருவாகும், யாரிடமும் கோபப்பட்டு பேச வேண்டாம், விசாகம் நட்சத்திரத்தினருக்கு தன வரவுகள் உண்டு, அனுஷம் நட்சத்திரத்தினருக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள், புதிய வேலை கிடைக்கும், கேட்டை நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருக்கும், திருமணம் குறித்த நல்ல தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் வெற்றிகள், கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நல்ல நாள், தாய் மாமனின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும், மூலம் நட்சத்திரத்தினருக்கு எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டு, நண்பர்களால் நன்மை கிடைக்கும், பூராடம் நட்சத்திரத்தினருக்கு மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெரும், உத்திராடம் நட்சத்திரத்தினர் எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று மனதில் இருந்த கஷ்டங்கள் விலகும் நல்ல நாள், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு அதிக வெற்றிகளை காண்பீர்கள், திருவோணம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை தேவை, பணியாற்றும் இடத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு பண வரவுகள் பெருகும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று இதமான பல தகவல்கள் தேடிவரும் நாள், நல்ல தனவரவுகள் உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினர் பிறருக்கு எந்த வாக்குறுதிகளும் தர வேண்டாம், ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம், சதயம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி உண்டு, பூரட்டாதி நட்சத்திரத்தினர் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம், யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது. அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சி பெருகும் நல்ல நாள், சிலருக்கு ஒரு டென்ஷனும் இருந்து கொண்டே இருக்கும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு கூடா நட்புகளை ஒதுக்கி வைப்பது நல்லது, உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவுகள் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப செய்திகள் தேடிவரும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு நாள் முழுவதும் ஒரு டென்ஷன் இருக்கும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்ல நாள்…கோபத்தை தவிர்க்க வேண்டும்…!!!

THAVAMANI NATARAJAN

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறைக்க சூப்பரான வழிமுறைகள்..!!!

THAVAMANI NATARAJAN

29.12.2020 இன்று வெற்றி மேல் வெற்றி வரும் நல்ல நாள்…பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை…!!!

THAVAMANI NATARAJAN

கண் அடிச்சா காதல் வருதோ இல்லையோ… இந்த நோய் வரவே வராதுங்க..!!

MANIMARAN M

23.12.2020 இன்று மனதிற்கு இனிமையான பல சம்பவங்கள் நடைபெரும் நாள்…யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்…!!!

THAVAMANI NATARAJAN

இன்று புதிய பதவிகள் தேடி வரும்…கருத்து மாறுபாடுகளை தவிர்ப்பது நல்லது…!!!

THAVAMANI NATARAJAN