Newskadai.com
லைஃப் ஸ்டைல்

15.02.2021 இன்று நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல் வரும் நாள்… குடும்பத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது…!!!

Today rasi palan
Share this:

இன்று 15.02.2021 மாசி மாதம் 03 தேதி திங்கள் கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 03.30- 07.30, மாலை: 04.30 – 05.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 09.30 – 10.30,  மாலை: 07.30 – 08.30.

சதுர்த்தி, சுபமுகூர்த்தம்

இன்று மாலை 07.26 வரை  சந்திர பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 02.57 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.

சந்திராஷ்டமம் :  பூரம், உத்திரம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று வேலை மாற்றம் குறித்த சிந்தனைகள் பெருகும் நாள், குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு தன வரவுகள் உண்டு, நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும், பரணி நட்சத்திரத்தினருக்கு தைரியம் பெருகும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு வாழ்வாதாரம் பெருகும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் நாள், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு சுப செய்திகள் தேடிவரும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு உடல் நல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று யோகமான நாளாக அமைகிறது, பதவி உயர்வுகள் தேடி வரும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு வெற்றிகரமான காரியங்கள் நடக்கும், திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு வேலை பார்க்கும் இடத்தில் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம், குடும்பத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது, புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன வரவு மற்றும் குடும்ப மேன்மை உண்டு. அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல் வரும் நாள், மனதில் மகிழ்ச்சி பெருகும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு சுப வரவுகள் உண்டு, பூசம் நட்சத்திரத்தினர் இன்று ஆடுகளுக்கு இலை தலைகளை உணவாக கொடுப்பது உயர்வை தரும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான எண் 6. வண்ணம் மஞ்சள் வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடக்கும் நாள், பயணங்களை தவிர்ப்பது நல்லது, மகம் நட்சத்திரத்தினர் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், பூரம் நட்சத்திரத்தினர் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு உடல் அலுப்புகள் இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் பச்சை வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்ல நாள், நீண்ட நாளாக இருந்த பிரச்சனைகள் விலகும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு விரைவாக வெற்றிகள் தேடிவரும், அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு தாய் வழி உறவுகளால் நன்மைகள் உண்டு, சித்திரை நட்சத்திரத்தினர் வண்டி வாகன பயணங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள், கடன் வாங்குவதை தவிர்க்கவும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு நீண்ட கால துன்பங்கள் விலகும், சுவாதி நட்சத்திரத்தினருக்கு பண வரவுகள் உண்டு, விசாகம் நட்சத்திரத்தினருக்கு வெற்றிகரமான தகவல்கள் வரும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


 

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று உடல் நல பிரச்சைகள் ஏற்பட்டு விலகும் நாள், விசாகம் நட்சத்திரத்தினருக்கு புதிய வேலை கிடைக்கும், அனுஷம் நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, கேட்டை நட்சத்திரத்தினருக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள், தைரியம் பெருகும், பேச்சு வார்த்தையில் கவனம் தேவை, மூலம் நட்சத்திரத்தினருக்கு நீண்ட கால பிரச்சனைகள் நிவர்த்தியாகும், கடன் தொல்லைகள் விலகும், பூராடம் நட்சத்திரத்தினர் எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை, உத்திராடம் நட்சத்திரத்தினர் கருத்துகள் சொல்லும் போது எச்சரிக்கை தேவை. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று தைரியம் பெருகும் நாள், வெற்றிகள் பெருகும், அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு தன வரவுகள் உண்டு, சளி தொல்லைகள் இருக்கும் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், திருவோணம் நட்சத்திரத்தினருக்கு  வரவுகள் உண்டு, உடல் நலத்தில் அக்கறை தேவை, அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பட்டு வெள்ளை வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும் நாள், உடல் நல பிரச்சனைகள் விலகும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன லாபம் கிடைக்கும், சதயம் நட்சத்திரத்தினருக்கு  நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு வரவினங்கள் பெருகும், எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றி பெரும் நாள், முயற்சிகளில் மனதில் ஒரு டென்ஷன் இருக்கும், பூரட்டாதி நட்சத்திர கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும், உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு  ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு பிரிந்தவர்கள் மீண்டும் சேருவார்கள், நண்பர்களால் நன்மை உண்டு, வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

இன்று தடைகளை தாண்டி வெற்றி பெருவீர்கள்…ஒழுக்கம் சார்ந்த அவப்பெயர் வர வாய்ப்புள்ளது கவனம் தேவை….

THAVAMANI NATARAJAN

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

அதிகரித்த தங்கம் விலை… இன்று வெள்ளியின் நிலை..!?

NEWSKADAI

தீபாவளி பண்டிகையில் இவ்வளவு இருக்கிறதா? வாங்க நாமும் கொண்டாடுவோம்

THAVAMANI NATARAJAN

இன்றிரவு வானில் நிகழப்போகும் அற்புதம்… எத்தனை மணிக்கு தோன்றும் தெரியுமா?

MANIMARAN M

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

NEWSKADAI