Newskadai.com
லைஃப் ஸ்டைல்

14.02.2021 இன்று இனிய செய்திகள் தேடிவரும் நல்ல நாள்…எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை…!!!

Today rasi palan
Share this:

இன்று 14.02.2021 மாசி மாதம் 02 தேதி ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 06.00- 07.00, மாலை: 03.30 – 04.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.30 – 11.30,  மாலை: 01.30 – 02.30.

உலக காதலர் தினம், உலக திருமண தினம்

இன்று மாலை 05.33 வரை  சந்திர பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 01.45 வரை துவிதியை பின்பு திரிதியை.

சந்திராஷ்டமம் :  மகம், பூரம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று நிதானமாக நடந்து கொண்டால் பல நன்மைகள் நடக்கும் நாள், கோபத்தை தவிர்க்க வேண்டும், எந்த செயலிலும் அவசரப்படக்கூடாது, அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டு விலகும் பயப்பட தேவையில்லை, பரணி நட்சத்திரத்தினருக்கு தன லாபம் அதிகரிக்கும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு தொழில் முயற்சிகள் வெற்றி பெரும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று பிறருக்கு உதவும் எண்ணங்கள் அதிகரிக்கும் நாள், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு வெற்றிகள் கிடைக்கும் நல்ல நாள், ரோகிணி நட்சத்திரத்தினர் கிருஷ்ணர் வழிபாடு செய்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகள் உண்டு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.   அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று கற்பக வள்ளியை வழிபட வேண்டிய நாள், வெற்றிகள் குவியும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் சிந்தணைகள் பெருகும், விருந்தினர் வருகை இருக்கும், திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு தன வரவு பெருகும்,  புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருக்கும், கோபத்தை தவிர்க்க வேண்டும், பொறுமையாக செயல்பட்டால் நட்மைகள் உண்டு. அதிஷ்டமான எண் 5, வண்ணம் இலை பச்சை வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள், அவசரப்பட்டு யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது, பொறுமையாக செயல்பட்டால் வெற்றிகள் உண்டு, தாய், தந்தை மீது மரியாதை செலுத்த வேண்டும், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும், பூசம் நட்சத்திரத்தினருக்கு வேலை வாய்ப்பு முயற்சி பெருகும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பாராத நல்ல தகவல்கள் தேடி வரும். அதிஷ்டமான எண் 6. வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று ராசிநாதன் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள், மகம் நட்சத்திரத்தினருக்கு பொழுதுபோக்கு காரியங்களில் அதிக ஈடுபாடு பெருகும், உடல் நலத்திலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும், பூரம் நட்சத்திரத்தினருக்கு பொருளாதார நில் உயரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு நண்பர்களால் நன்மை உண்டு. அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள், சிலருக்கு இடமாற்றம், வேலை மாற்றம் இருக்கும், உத்திரம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், அஸ்தம் நட்சத்திரத்தினருக்கு பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை, உங்கள் உடல் நலத்திலும் தாயாரின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு தன வரவுகள் உண்டு. அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மருத்துவர்களுக்கு பாராட்டுகளும், புதிய வேலை கிடைக்கும் நாள், சித்திரை நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், சுவாதி நட்சத்திரத்தினருக்கு தன வரவு உண்டு, விசாகம் நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


 

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியான நாள், புதிய வீடு கட்டும் முயற்சிகள் இருக்கும், உடல் நலம் குறித்த சிந்தணைகள் பெருகும், விசாகம் நட்சத்திரத்தினருக்கு உடல் நல பிரச்சனை வந்து நீங்கும், அனுஷம் நட்சத்திரத்தினருக்கு குடும்ப விஷயங்களில் விட்டுக்கொணுத்து செல்வது நல்லது, கேட்டை நட்சத்திரத்தினருக்கு தன வரவு உண்டு. அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று வாழ்க்கையில் பல மேன்மைகளை உருவாக்கித்தரும் நாள், மூலம் நட்சத்திரத்தினர் வலிமையான எதிரிகளை எதிர்கொள்வீர்கள், பூராடம் நட்சத்திரத்தினருக்கு பொருளாதார நிலை உயரும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு நீண்ட கால கனவுகள் நனவாகும் சூழல் அமையும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று இனிய செய்திகள் தேடிவரும் நல்ல நாள், தன வரவு பெருகும், குடும்பத்தில் சுபச்செய்திகள் தேடிவரும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை, திருவோணம் நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் புதிய சூழல் உருவாகும், பல நன்மைகள் நடக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு சில நண்பர்கள் கூட எதிரிகளாக மாறும் வாய்ப்புள்ளது எச்சரிக்கை தேவை. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று மாற்றங்கள் இருக்கும் நாள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும், ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும், அவிட்டம் நட்சத்திரத்தினர் துனிந்து சில முடிவுகள் எடுத்து வெற்றி பெருவீர்கள், சதயம் நட்சத்திரத்தினருக்கு பொருளாதார உயர்வு உண்டு, பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு மாலை நேரம் வரை ஒரு டென்ஷன் இருக்கும், பிரகு நல்ல தன லாபம் கிடைக்கும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும் நாள், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு ஒரு டென்ஷன் இருந்தாலும் வெற்றிகள் தேடிவரும், உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு பசு வழிபாடு செய்ய வேண்டும், தன வருமானம் மற்றும் நன்மைகள்  பெருகும், ரேவதி நட்சத்திரத்தினருக்கு நீண்ட காலமாக பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

வீட்டிலேயே மண மணக்கும் ரசப்பொடி தயார் செய்வது எப்படி?

AMARA

25.12.2020 இன்று திருமண முயற்சிகள் வெற்றி பெரும் நாள்…பிறரின் சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்…!!!

THAVAMANI NATARAJAN

இன்று எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்… யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்…

NEWSKADAI

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள்… அதிஷ்டம் இந்த கலரில் இருக்கு…!!

THAVAMANI NATARAJAN

இன்று கொஞ்சம் கவனம் தேவை: வம்பு-வழக்குகளில் விலகி இருங்கள், முருகப்பெருமானை வழிபாடுங்கள்…

NEWSKADAI