Newskadai.com
லைஃப் ஸ்டைல்

13.02.2021 இன்று பல தடைகள் வந்தாலும் வெற்றி பெரும் நாள்…கோபத்தை தவிர்ப்பது நல்லது…!!!

Today rasi palan
Share this:

இன்று 13.02.2021 மாசி மாதம் 01 தேதி சனிக்கிழமை 12 ராசிகளுக்கான பொதுபலன்கள்.

நல்லநேரம் : காலை: 07.30- 08.30, மாலை: 04.30 – 05.30.

கௌரி பஞ்சாங்க நல்லநேரம் : காலை: 10.30 – 11.30,  மாலை: 09.30 – 10.30.

சந்திர தரிசனம்

இன்று மாலை 04.02 வரை  சந்திர பகவான் சதயம் நட்சத்திரத்தில் இருக்கிறார், பிறகு பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இன்றைய திதி : இன்று அதிகாலை 01.12 வரை பிரதமை பின்பு துவிதியை.

சந்திராஷ்டமம் :  ஆயில்யம், மகம்


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – குறள் 380

Mesam Rasi

மேஷம் 

மேஷ ராசி நேயர்களே இன்று எடுக்கும் முயற்சிகளில் வேகத்தையும் வெற்றியையும் தரும் நாள்,  குடும்பத்திற்கு தேவையான வருமானம் வரும், அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு, உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், பரணி நட்சத்திரத்தினருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு தந்தையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், அரசு அதிகாரிகள் சில போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிஷ்டமான எண் 5, வண்ணம் மரகத வண்ணம்.


daily horoscope

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று அற்புதமான நாள், கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், ராஜ கிரகங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும், ரோகிணி நட்சத்திரத்தினருக்கு சிறு தூர பயணங்கள் அமையும், தொழில் முயற்சிகள் வெற்றி பெரும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினர் திருமண உறவில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அதிஷ்டமான எண் 2, வண்ணம் முத்து வண்ணம்.


Mithunam Rasi

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று பல தடைகள் வந்தாலும் வெற்றி பெரும் நாள், மிருகசீரிஷம் நட்சத்திரத்தினருக்கு சகோதரர்களால் நன்மை கிடைக்கும், சொத்துக்களால் லாபம் உண்டு, திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு மாலை பொழுது வரை ஒரு டென்ஷன் இருக்கும், பொறுமையாக செல்ல வேண்டும் யாரிடமும் கோபப்படக்கூடாது, புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு தன வரவு பெருகும். அதிஷ்டமான எண் 1, வண்ணம் மாணிக்க வண்ணம்.


Kadakam Rasi

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று பிறர் மீது அன்பை அள்ளித்தெளிக்கும் நாள், புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு நல்ல தன லாபம் கிடைக்கும், பூசம் நட்சத்திரத்தினருக்கு வேலையினால் நன்மை உண்டு, வருமானம் பெருகும், ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு நன்மைகளும் தன வரவும் பெருகும் நாள். அதிஷ்டமான எண் 5. வண்ணம் இலை பச்சை வண்ணம்.


daily horoscope

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று வாழ்க்கையை உயர்த்தும் நாளாக அமைகிறது, மகம் நட்சத்திரத்தினர் விநாயகர் வழிபாடு செய்வதால் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், பூரம் நட்சத்திரத்தினர் ரங்கநாதரை வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் ஈடேரும், உத்திரம் நட்சத்திரத்தினருக்கு  எதிர்பாராத வெற்றிகரமான செய்திகள் தேடிவரும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் வெள்ளை வண்ணம்.

 


Kanni Rasi

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று பொருளாதார தடைகள் விலகும் நாள், பிள்ளைகள் வழியில் முன்னேற்றமான செய்திகள் வரும், கடன்கள் குறையும், உத்திரம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், அரசு பணியாளர்களுக்கு வேலைபழு அதிகரிக்கும், அஸதம் நட்சத்திரத்தினருக்கு யாரையும் பகைத்துக்கொள்ளாமல் இருந்தால் இனிய நாள், சித்திரை நட்சத்திரத்தினர் வண்டி வாகன பயணங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். அதிஷ்டமான எண் 9, வண்ணம் பவள வண்ணம்.


Thulaam Rasi

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று எண்ணிய எண்ணங்கள் ஈடேரும் நல்ல நாள், சித்திரை நட்சத்திரத்தினருக்கு நல்ல தன லாபம் உண்டு, சுவாதி நட்சத்திரத்தினருக்கு மனதில் ஒரு டென்ஷன் இருக்கும், விசாகம் நட்சத்திரத்தினருக்கு புதிய நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் தேன் வண்ணம்.


 

விருச்சகம்

விருச்சக ராசி நேயர்களே இன்று உடல் நலத்திலும் கடன் விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள், கடன் வாங்குவதை தவிர்க்கவும், விசாகம் நட்சத்திரத்தினருக்கு வேலை வாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெரும், குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சேருவார், அனுஷம் நட்சத்திரத்தினர் இன்று மான் படத்தினை வீட்டில் வைத்தால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், கேட்டை நட்சத்திரத்தினருக்கு தன லாபம் தைரியம் பெருகும் நாள். அதிஷ்டமான எண் 4, வண்ணம் காக்கி வண்ணம்.


Dhanusu Rasi

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று நல்ல தன லாபம் கிடைக்கும் நாள், பெரியோரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், , தைரியம் பெருகும், மூலம் நட்சத்திரத்தினருக்கு மூச்சு பயிற்சி மற்றும் தியானம் செய்தால் வெற்றிகள் உண்டு, பூராடம் நட்சத்திரத்தினருக்கு எதிர்பாராத தன வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது, உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு நீண்ட தொலைவில் இருந்த நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். அதிஷ்டமான எண் 7, வண்ணம் ரோஜா வண்ணம்.


Magaram Rasi

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று தொழிலில் வருமானம் அதிகரிக்கும் நாள், பலருக்கு திருமணம் உறுதியாகும், உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு வாழ்க்கை உயரும் நாள், திருவோணம் நட்சத்திரத்தினர் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு குடும்ப மேன்மை மற்றும் பொருளாதார மேன்மை இருக்கும். அதிஷ்டமான எண் 3, வண்ணம் சந்தண வண்ணம்.


Kumbam Rasi

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற வேண்டிய நாள், அவிட்டம் நட்சத்திரத்தினருக்கு பொருளாதார உயர்வு பெற வழிவகை பிறக்கும், சதயம் நட்சத்திரத்தினருக்கு மாலை பொழுது வரை ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும், வேலைபழு அதிகரிக்கும், பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு நண்பர்களால் நன்மை உண்டு. அதிஷ்டமான எண் 9, வண்ணம் அடர் சிகப்பு வண்ணம்.


Meenam Rasi

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று பல மாற்றங்களை உருவாக்கும் நாள், சில சோதனைகளையும் சில சாதனைகளையும் சந்திக்கும் காலகட்டம் இது, பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு வியாபாரத்தில் லாபம் பெருகும், உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்த ஓட்டுநர்களுக்கு கடவுள் திருவருள் கிடைக்கும் நல்ல நாள், ரேவதி நட்சத்திரத்தினர் எந்த தவறும் செய்துவிடக்கூடாது, தவறு செய்தால் தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்படும். அதிஷ்டமான எண் 6, வண்ணம் பால் வெள்ளை வண்ணம்.


இதையும் படிக்கலாம் :பிரம்மதண்டின் சிறப்புகள்….மருத்துவ ரகசியம்…!!!


Share this:

Related posts

இன்று பல தடைகள் வெற்றியாக முடியும்… சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை..!!

THAVAMANI NATARAJAN

24.02.2021 இன்று வெற்றிகரமான நாள், மன தைரியம் அதிகரிக்கும்…முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்…!!!

THAVAMANI NATARAJAN

இன்றைய ராசிபலன்: செய்யும் காரியங்கள் சிறப்பாக அமையும்…

THAVAMANI NATARAJAN

இந்த ராசிகாரர்கள் கவனமாக இருக்க வேண்டும்… மன தைரியமும், உடலநல அக்கறையும் தேவை…!!

THAVAMANI NATARAJAN

23.01.2021 இன்று எதை செய்தாலும் வெற்றி பெரும் நாள்…பகைவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை…!!!

THAVAMANI NATARAJAN

31.01.2021 இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்… அரசு வழி காரியங்களில் எச்சரிக்கை தேவை…!!!

THAVAMANI NATARAJAN