Newskadai.com
தமிழ்நாடு

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

Share this:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தற்போது நகரங்களைத் தாண்டி கிராமங்களை பாதித்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற கறி விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்ற தகவல் பரவியது

 

இதையடுத்து கறி விருந்தில் பங்கேற்றவர்கள், அவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் என மொத்தம் 152 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இதுவரை 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை விவரங்கள் இன்று வெளியாகும் பட்சத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

 

Jalakandapuram

இதனிடையே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் நுழைய முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறித்து தகவலறிந்து வந்த ஆட்சியர் ராமன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும் இன்று முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த அறிவிப்பு வெளியான உடனே பீதியடைந்த மக்கள் கூட்டம், கூட்டமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்க முண்டியடித்தனர். ஏடிஎம், காய்கறி கடைகள், மளிகை கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று முதல் ஜலகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆனால் கொரோனாவே வந்தாலும் நாங்க சமாளிப்போம் என்ற தொனியில் சிலர் பைக்கில் ஊர் சுற்றுவதையும் காண முடிகிறது. கறி விருந்து நடத்தி கொரோனாவை கூட்டி வந்தது போதாது என்று, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மக்களை காக்க பிறப்பித்த ஊரடங்கை மீறுவது நியாயமா? என ஜலகைவாசிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்.


Share this:

Related posts

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA

செப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!

AMARA

ரஜினி வேண்டாம்… பாஜகவுக்கு தாவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை… காரணம் என்ன??

AMARA

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M