Newskadai.com
அரசியல்

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு : இன்று வெளியாகிறது தீர்ப்பு…!!!

Share this:

கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட 48 பேர் மீது குற்றம் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் இறுதிக்குள் இந்த வழக்கை நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 16 பேர் இறந்தவிட்ட நிலையில், மீதமுள்ள 32 பேரும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இதனால் இந்த வழக்கின் விசாரணை முடிவுற்றது, இதைத் தொடர்ந்து செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்க இருப்பதாக வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தெரிவித்திருந்தார்.

மேலும் தீர்பளிக்கும் நாளில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். இன்று இந்த வழக்கின் தீர்ப்பு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து நீதிமன்றப் பகுதியில் 2000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Share this:

Related posts

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!

AMARA

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

நாளை சத்யமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடல் வைப்பு… மக்கள் அஞ்சலிக்காக சிறப்பு ஏற்பாடு…!

AMARA

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

MANIMARAN M

அடிதூள்: சேலம், தேனி, திருப்பூரில் கால்நடை மருத்துவக் கல்லூரி… அசத்தும் தமிழக அரசு…!!

NEWSKADAI