ஆகஸ்ட் மாத இறுதியில் சற்று தங்கம் விலை குறைய ஆரம்பித்தது மக்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்தது. தற்போது முகூர்ந்த சீசன் ஆரம்பித்துள்ளதால், திருமணத்திற்கு தேவையான நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். லாக்டவுனுக்கு பிறகு கட்டுப்பாடு வழிமுறைகளுடன் நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டத்தையும் கடைகளில் காண முடிந்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாகவே தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் சில நாட்களில் தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டிவிடும் என கணிக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரக்ட் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து, 39 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 888 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ 69 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம், வெள்ளியின் விலை நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.