Newskadai.com
லைஃப் ஸ்டைல்

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

Share this:

கொரோனா வைரஸின் தாக்கம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலையும் ராக்கெட் வேகத்தில் விண்ணத்தை தொட்டது. கடந்த மாதம் முழுவதும் உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை மாத இறுதியில் இருந்து சற்றே குறைய ஆரம்பித்தது. சரியாக முகூர்ந்த நேரம் என்பதால் மக்களும் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர்.

நேற்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரக்ட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், மாலை மேலும் 16 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலையும் 34 ரூபாய் வரை சரிந்து காணப்பட்டது.

ஆனால் இன்றைய நிலவரப்படி காலை முதலே தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது. சென்னையில் 22 கேரக்ட ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 88 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11 அதிகரித்து 4 ஆயிரத்து 886 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலை நேற்று ரூ.70.40-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 1 ரூபாய் 90 காசுகள் வரை குறைந்து இன்று 68.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68 ஆயிரத்து 500 ஆக உள்ளது.


Share this:

Related posts

இந்த ராசிகாரர்களுக்கெல்லாம் அதிஷ்ட எண்ணால இன்றைக்கு அம்சமான நாளாக இருக்கபோகுது

NEWSKADAI

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி…. அடடே இன்னைக்கு ரொம்ப சூப்பரான நாளா இருக்கே…!!

THAVAMANI NATARAJAN

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

‘ஜிம்’ போனால் மட்டும் தான் ஆரோக்கியம் கிடைக்குமா?… வீட்டிலிருந்த படியே இதை மட்டும் செய்தால் போதும்…!

NEWSKADAI