Newskadai.com
இந்தியா

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்ந்து அமல்படுத்துப்பட்டு வருகிறது. இதனால் ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளி கல்லூரிகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன.

பல கிராமங்கள் இணையசேவை இல்லாமலும், பல மாணவர்கள் செல்போன், லேப்டாப் வசதி இல்லாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் கல்லூரி மாணவி, ஆன்லைன் வகுப்பிற்காக மலை உச்சிக்கு சென்று நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் குடிசை அமைத்து படித்து வருகிறார். மகாராஷ்ட்ராவின் சிந்துதுர்க் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னாலி கோபிநாத் சுடர். இவர் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.

தற்போது கொரோனா முடக்கத்தால் இவருக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர் வசிக்கும் கிராமத்தில் இணையசேவை கிடைக்காத காரணத்தால் அருகில் இருக்கும் இணைய சேவை கிடைக்கும் இடமான கங்காவ்ளி மலை உச்சிக்கு சென்று குடிசை அமைத்து படித்து வருகிறார். அங்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்து ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வருகிறார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. படிப்பின் மீது இந்த மாணவி கொண்டுள்ள ஆர்வமே இந்த முயற்சி என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.


Share this:

Related posts

இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிர்ச்சித் தகவல்..!!!

MANIMARAN M

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

NEWSKADAI

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI

நதிநீர் பங்கீடு: கேரள – தமிழக அரசுகள் இடையே முக்கிய ஆலோசனை…!!

MANIMARAN M