Newskadai.com
தமிழ்நாடு

அமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்…

Share this:

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி 61 வயதுடைய கலைச்செல்வி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு உடனிருந்து மனைவியை கவனித்து வந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். நேற்று நாகப்பட்டினத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வந்த முதல்வருடன் அமைச்சர் ஓ.எஸ். மணியன் சென்னையில் இருந்து வந்து கலந்துக் கொண்டார்.

நாகப்பட்டினத்தில் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு மனைவி கலைச்செல்வியின் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி கலைச்செல்வி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அமைச்சரின் சொந்த ஊரான ஓரடியம்புலத்தில் அவருடைய மனைவியின் இறுதிச்சடங்குகள் நடத்தப்படவுள்ளது. மனைவியை இழந்து நிற்கும் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

அடிதூள்… நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம்…!!

MANIMARAN M

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

மீனாட்சி!.. மீனாட்சி!!… என்னாச்சு!?.. என்னாச்சு!!?… கைலாசா நாட்டு நாணயம் வந்தாச்சு..!!

THAVAMANI NATARAJAN

இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது பல்கலைக்கழகம்…!!

AMARA