Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

இந்த தளத்திற்கு சென்றால் ரெம்டெசிவிர் மருந்தை பெறலாம் – அரசின் அதிரடி அறிவிப்பு

Remdesivir
Share this:

கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்தை ஆன்லைனில் பெறுவதற்கான இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவின் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலன் அளிப்பதை தொடர்ந்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நோயாளிகளின் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையானது ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஏராளமானோர் குவிந்ததால் கோரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனிடையே கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தர்னியார் மருத்துவமனைகளுக்கும் தேவைக்கு ஏற்ப ரெம்டெசிவிர் மருந்து அனுப்பி வைக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படாது என்றும் கூறப்பட்டது. எனினும் ரெம்டெசிவிர் மருந்தை இணைய தளம் மூலம் விற்பனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து பெறுவதற்கான இணைய தள முகவரியை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தனியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அதனை பெறலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மூணாறு நிலச்சரிவு: தமிழக குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

NEWSKADAI

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!

NEWSKADAI

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

THAVAMANI NATARAJAN

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI