Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு..!!!

Share this:

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர அனுமதி இல்லை. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் எழுத்துபூர்வமான சான்று கடிதம் பெற்று வரவேண்டும்.

Private Schoolமுதற்கட்டமாக 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கும். மேற்கண்ட வகுப்பு மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் மற்றொரு குழுவினர் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் என வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர். மேலும் பள்ளிக்குள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Private School

  • பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையிலும் சமூக இடைவெளிப் பின்பற்ற வேண்டும்.
  • வகுப்பறையில் 6 அடி இடைவெளியுடன் மாணவர்களை அமரச் செய்ய வேண்டும்.
  • பள்ளிக்குள் எந்த இடத்திலும் கூட்டம் கூடக்கூடாது.
  • விளையாட்டு நிகழ்வுகள் தவிர்க்கபட வேண்டும்.
  • இயற்கைச் சூழலில் வகுப்புகளை நடத்தலாம்.
  • ஆசிரியர்களும் மாணவர்களும் கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே வகுப்புக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
  • ஆசிரியர்களும், மாணவர்களும், அலுவலக ஊழியர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
  • ஆசிரியர் மாணவர்கள் உட்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • நோட்டுப் புத்தகங்கள், ரப்பர், பேனாக்கள், பென்சில்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை மாணவர்கள் தனித்தனியாக வைத்திருக்கவேண்டும். அவற்றை மாணவர்களுக்குள் பகிரக்கூடாது.
  • பயோமெட்ரிக் முறைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்.

Share this:

Related posts

கொதித்தெழுந்த மன்னார்குடி விவசாயிகள்… வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்…!!

MANIMARAN M

முனீஸ்வரருக்கு தானமாக இடமளித்த அப்துல் காதர்…..

MANIMARAN M

JEE தேர்வு எழுத முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறும் மாணவர்கள்… மாவட்டம் டூ மாவட்டம் செல்ல பேருந்து இயக்கம் இல்லாததால் அவலம்…!

POONKUZHALI

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

MANIMARAN M

சேலத்தை கதறவிடும் ‘கொரோனா’… 136 இடங்களில் இன்று மருத்துவ முகாம்…!!

THAVAMANI NATARAJAN

ரூ.50,000 சம்பளம் வேண்டுமா? உடனே விண்ணபிக்கவும்… வருவாய் துறையில் வேலைவாய்ப்பு..!!!

THAVAMANI NATARAJAN