தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பரவல் 35 ஆயிரத்தை கடந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன.இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த முழு ஊரடங்கு ஜூன் முதல் வாரமும் நீட்டிக்கப்பட்டது. இதன் பலனாய் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது. ஆரம்பக்கட்டத்தில் 35 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 22 ஆயிரமாக குறைந்தது.
இந்த சூழலில் அடுத்தக்கட்ட ஊரடங்கு குறித்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலர் வெ.இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். அதன்பிறகு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி காலை 6மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அத்யாவசிய கடைகளும், தொழில்நுட்பம் சார்ந்த சில கடைகளும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மிகுந்த கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.