தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாவுக்கு எதிராக போடும் முன் களப் பணியாளர்களான அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:http://“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!
இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலில் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 29ம் தேதி மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும் படிக்க: http://மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!
இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜ்பவனிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள ஆளுநருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதியானதால், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.