Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு குட்நியூஸ்… தமிழக அரசின் அசத்தல் அனுமதி…!

shop lockdown
Share this:

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜூன் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. முழு ஊரடங்கால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே இந்த 11 மாவட்டங்களைத் தவிர நோய் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Corona lockdown

• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள். காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

• காய்கறி, பழம் மற்றும் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

• மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

• இறைச்சிக் கூடங்களில் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

• தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 மொத்த சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

• சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு. பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

தனியார் பாதுகாப்பு அலுவலகம், சேவை வீடுகள் நிறுவனங்கள் மற்றும் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

• மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

• மின் பொருட்கள் (electrical goods), பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

• மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

• ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

• வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

• கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

• வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை செயல்பட அனுமதி.

• வாடகை வாகனங்கள், ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும். பயணிகள் டேக்ஸிகள் இ-பதிவுடன் மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி.

• நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி.

• கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு. நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள். ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும். 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

AMARA

ஆன்லைனில் வகுப்பில் பாலியல் தொல்லை… பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு…!

NEWSKADAI

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

பிரபல கார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் வைத்த ‘குட்டு’… தமிழக அரசுக்கும் அதிரடி உத்தரவு!

AMARA

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA