Newskadai.com
அரசியல்

இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Assembly
Share this:

தமிழகத்தில் கொரோனா 2வது அலைக் கட்டுக்குள் வர தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துதல், முழு ஊரடங்கு, ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணத் தொகை, முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதேபோல் காய்கறி, பால், மளிகை பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் என எவற்றின் விலை உச்சத்திற்கு ஏறினாலும் அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

N 95 Mask

அந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் பார்வை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மீது திரும்பியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 நோய் தடுப்பு பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

3 அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்றுக்கு அதன் தரத்தைப் பொறுத்து அதிக பட்சமாக ரூ.4.50 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 மில்லி சானிடைசரை அதிகபட்சமாக 110 ரூபாய்க்கு விற்கலாம் என்றும், N95 முகக்கவசத்தை 22 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிபிஇ கிட் எனப்படும் கவச உடைக்கான அதிக பட்ச விலை ரூ.273 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் மாஸ்க்கின் அதிகபட்ச விலை 54 ரூபாயாகவும், பல்ஸ் ஆக்சிமீட்டரின் விலை 1,500 ரூபாயும் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மேல் விற்க கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.


Share this:

Related posts

ஸ்டாலின் அதற்கு சரிபட மாட்டார்… துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்… சுப்ரமணியன் சுவாமி பொளேர்…!

AMARA

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN

பாஜக, திமுக என பாரபட்சம் பார்க்காமல் பாயும் வழக்கு… லாக்டவுனில் கூடி கும்மாளம் போட்டால் அடித்து தூள் கிளப்பும் அதிமுக அரசு….!

AMARA

மத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழுத்தம்…!

NEWSKADAI

மாஜி அமைச்சருக்கு மரண அடி… சிறப்பா செஞ்சிட்டாங்க சிறப்பு நீதிமன்றம்..!

NEWSKADAI

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா..?

MANIMARAN M