இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நேற்று லாக்டவுனை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசும் இன்று பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் எவற்றின் மீதான தடைகள் தொடரும் என பார்க்கலாம்…
- வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளை இயக்க தடை
- பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
- மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் செயல்பட செப்டம்பர் 15ம் தேதி வரை தடை விதிப்பு
- 144 சட்டப்பிரிவின் படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது
- நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிப்பு
- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை தொடரும்
- மதம் சாந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை தொடரும்
- தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருட்காட்சியகங்கள், சுற்றுலாத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்